Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இப்படி யோசித்தால் என்ன?

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

தமிழர் திருநாள் கொண்டாட்டங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு வழக்கம் போல இந்த ஆண்டும் நடைபெற்று முடிந்தது என்றாலும், அது நடத்தப்பட்ட விதமும், இந்த வீர விளையாட்டு வணிக மயமாக் கப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது இந்த விளையாட்டில் அரசு தலை யிட வேண்டிய அவசியம் ஏற்பட்டு ள்ளதை உணர முடிகிறது. ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தத் தமிழர் விளையாட்டு பழங்கால முத்திரைச் சின்னமாக இடம்பெற்று இருந்திருக்கிறது. இது குறித்த வரலாற்றுப் பதிவுகளும் இருக்கின்றன. ஏறுதழுவுதல் என்கிற இந்த வீர விளையாட்டு, பொங்கல் திருநாளில் மட்டும்தான் நடத்தப்பட்டதா என்பது குறித்து சந்தேகத்துக்கு இடமின்றிச் சொல்ல முடியாது. இருப்பினும், பொங்கல் நேரத்தில் ஓய்வும், பண்டிகைக் கொண்டாட் டங்களும் நிறைந்த வேளையில் இது வழக்கத்துக்கு வந்திருக்க வேண்டும். பரிசுத் தொகையாக சல்லி (காசுகளை) கொம்பில் கட்டப்பட்ட காரணத்தால் சல்லிக்கட்டு என்று அழைக்கப் பட்ட இவ்விளை யாட்டு, இன்று ஒரு சூதாட்டத்தை நோக்கி நடைபயின்று கொண்டிருக் கிறது. நீதி மன்றத்தின் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க இயலாத நிலை யில் இந்த விளையாட்டை பல இடங்களில் நடத்த முடியாமல் போனது என்பது ஒரு புறம் இருக்க, இந்த விளை யாட்டில் மாடுகளுக்கும், அடக்கவரும் இளைஞர் களுக்கும் அரசியல் சாயம் பூசப் பட்டதன் காரணமாக பல இடங்களில் ஜல்லிக்கட்டு பாதியிலேயே நிறுத்தப் பட்டு விட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.அரசியல் தலைவரின் பனியன் அணிந்தவர்கள் ஒரு காளையை அடக்கா விட்டால் அது அந்தத் தலைவருக்கு அவமானம் என்பதாகச் சித்திரிப் பதும், அதற்காக விதிமுறைகளை மீற முயல்வதும் நடந்துள்ளன. என் காளையை யாரும் அடக்க முடியாது என்று பெட்டிங் (பந்தயம்) நடப்பதாலேயே அந்தக் காளையை யாரும் அடக்கக்கூடாது, மீறினால் அடிஉதை என்ற மிரட்டலும், கோஷ்டி மோதல்களும் ஒருபுறம் அரங்கேறின. இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பார்வையாளர் கட்டணங்கள் மூலம் சம்பாதிப் பதோடு, மாடுகளை இடம்பெறச் செய்யப் பணமும் பெற்றுள் ளதாகவும் தெரிகிறது.இப்போதுஇந்த விளை யாட்டு நடத்து வோர் முன்வைப்புத் தொகையாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும், கலந்து கொள்ளும் மாடுகளைப் படங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என்கிறது நீதிமன்ற நிபந்தனை. தமிழ்நாட்டில் பல அமைப்புகளுக்கு ரூ.5 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்தும் வசதி இல்லை. இதனால் பல அமைப்புகள் ஜல்லிக் கட்டு நிகழ்வுகளை நடத்த முடியாமல் போயிருக்கிறது. மாடுகள் சித்திரவதை செய்யப் படுவது கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத் துகிறது. மாடுகளின் வாலை முறுக்குவதைத்தான் இங்கே சித்திரவதை என்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த ஒரு ஜல்லிக் கட்டிலும் காளைகள் இறந்ததில்லை. ஆனால், காளையர் சிலர் இறந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் “புல் ஃபைட்’டில் மாடுகள் கொல்லப்படுகின்றன. ஆனால், தமிழ் நாட்டில் அத்தகைய நிலை இல்லை. இங்கே மாடுகள்தான் சில நேரங்களில் மனிதர்களைக்கொல்கின்றன.மேலும், ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளை அவிழ்த்துவிடப்படுகிறது. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது. வடதமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்வது. இந்த மூன்று வகை விளையாட்டிலுமே, எந்தவொரு இளைஞரும் அதற்கான தனித் திறமை இல்லாமல் வெறுமனே களத்தில் இறங்கிவிட முடியாது. இதற்கான பயிற்சியும், காளையின் போக்கு குறித்து அதன் உடல்மொழியைப் புரிந்துகொள்கிற மாட்டு சாஸ்திரமும் ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும்.தமிழக அரசு இந்த வீர விளையாட்டைக் காட்டு மிராண்டித்தனம் என்று கருதினால், இதற்கு முழுமையாகத் தடைவிதித்துவிட வேண்டும். அல்லது இது தமிழரின் வீர விளையாட்டு என்று கருதுமேயானால் தானே முன்னின்று நடத்த வேண்டும். மாடுகள் தேர்வு, காளையை அடக்க விரும்பும் இளைஞர்கள் தேர்வு இரண்டையும் சரியான நபர்களுடன் விளையாட்டுத் துறை மூலம் தேர்வு செய் வதுடன், இளைஞர் களுக்குப் பயிற்சியும், மிருகவதைத் தடுப்புக் கல்வி யையும்கூட அளிக்க முடியும். காயமடைந் தவர்களுக்கு சிறந்த ஏறுதழுவும் வீரர்களை ஒரு நடுவர்கள் குழு மற்றும் காட்சிப் பதிவு (மூன்றாவது நடுவர்) மூலமாக உறுதி செய்து, அரசே பரிசுகள் வழங்கலாம். சிறந்த காளைகளின் உரிமை யாளர்களுக்கும் பரிசு வழங்கலாம். மாவட்டம் தோறும் விளை யாட் டர ங்கத்துக்குள் இப்போட்டியை நடத்தவும், பார்வை யாளர்களை இலவச மாக அனுமதிக்கவும், வெளிநாட்டினர் மற்றும் சிறப்பு இருக்கை வேண்டுவோருக்கு மட்டும் குறைந்த கட்டணங்களை நிர்ணயிக்கவும் செய்யலாம். காய மடை வோருக்கு சிகிச்சைச் செலவையும் அரசே இந்த கட்டணங் களைக் கொண்டு ஏற்க முடியும். இந்த வீர விளை யாட்டை வேண்டாம் என தடை விதிப்பது, அல்லது வேண்டும் என்கிற பட்சத்தில் அரசே முறையாக நடத்துவது என்கிற இரு முடிவுகளில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளத் தவறினால், தமிழகத்தில் அடுத்துவரும் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு என்கிற வீர விளையாட்டு வெறும் சூதாட்டக்களமாக மாறுவதுடன், “கொம்பு முளைத்த’ மனிதர் களால் கொலைக்களமாகவும் மாறக் கூடும். சண்டியர்கள் மட்டுமே இந்த விளையாட்டில் கெக்க ளிப்புடன் நிற்பார்கள். கேரளத்தில் நேருகோப்பை படகுப் போட்டி யைக் கேரள சுற்றுலாத் துறை வெற்றி கரமாக நடத்தி, உலகளா விய சுற்றுலாப் பயணி களை ஈர்ப்பதுபோல, ஏன் தமிழகமும் இந்த வீர விளை யாட்டை ஸ்பெயின் நாட்டின் “புல்ஃபைட்’ போல உலக அரங்கில் விளம்பரப் படுத்தி சுற்றுலா வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதுதான் நமது கோரிக்கை.

Leave a Reply