Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காங்கிரசுக்கு எதிராக . . . – சீமான்

திருப்பூரில் நாம் தமிழர் இயக்க கட்சி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. கட்சித்தலைவர் சீமான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிர்வாகிகளை அறிமுகம் செய்தார். பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறிய தாவது:-
எங்கள் இயக்கம் தமிழர்களுக்காக போராடி வருகிறது. நாம் தமிழர் இயக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியதுள்ளது. வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி யிட மாட்டோம்.   தமிழக சட்ட சபை தேர்தலில் காங் கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வேன். காங்கிரஸ் கட்சி தான் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு காரணமாக இருந்து வருகிறது.
இதுவரை 537 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதித்து வருகிறது. மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுகிறது. இதனால் தான் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் என்பது எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவான பிரசாரம் அல்ல. எங்களுடைய பிரசாரத்தால் மற்ற கட்சிகள் பயனடைந்தால் நாங்கள் அதற்கு பொறுப்பல்ல. உடுமலை அருகே யுள்ள சைனிக் பள்ளி மாணவர்களுக்கு ராஜபக்சே உருவப்படம் அச்சடித்த காலண்டர் வினியோகம் செய்யப் பட்டதை கண்டிக்கிறோம்.
மது விற்பனைக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசுகள் விற்க அனுமதி அளிக்காததை கண்டிக்கிறோம். கள் மது அல்ல. உணவுப் பொருள். மற்ற கள் இயக்கங்களுடன் சேர்ந்து கள் இறக்குவதற்கு ஆதரவாக போராடுவோம். மேற்கண்டவாறு சீமான் கூறினார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: