சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் கருகி பலியானார்கள். கீழ வாடியூர் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணி யாற்றிக் கொண் டிருந் தனர்.
இன்று காலை 12 மணி அளவில் பலத்த சப்தத்துடன் வெடிக்கும் சப்தம் கேட்டது. இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண் டிருந்த வர்கள் ஆலையில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதில் 20 க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந் துள்ளனர். காயமுற்றவர்கள் மீட்கப்பட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட தகவலில் 4 பேர் இறந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் உயிர்ப் பலி அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இறந்தவர்கள் பெயர் விபரம்: பெ.ஆறுமுகம் ஓ.கேவில்பட்டி , சின்ன இன்னாசிமுத்து ஓ.கோவில்பட்டி, அ.ஆறுமுகம் ஓ, கோவில் பட்டி, மாடசாமி முதலிப்பட்டி ஆகியோர் இறந்தனர்.
காயமுற்றவர்கள் பெயர் விவரம் வருமாறு: கந்தவேல் ( 40) உப் போடை, செல்வம்(23), முதலிப்பட்டி, சுப்பராஜ்(31), இனாம் ரெட் டியார் பட்டி, பெருமாள்( 30), கல்போது, பஞ்சவர்ணம் (31), சொக்க லிங்க புரம், அந்தோணி(40), ஓ.கோவில்பட்டி, முத்தழகி (45), சொக்கலிங்க புரம், மீனாட்சி(30), கல்போது, ராமர்(40), ஒ. கோவில் பட்டி, சந்திரன்(35). சேர்வைக்காரன்பட்டி.
அதிகாரிகள் 8 பேர் பலி: சிவகாசி ஆலையில் தீபாவளிக்கு பட்டாசு தயாரித்து கொண்டிருக்கும் போது கடந்த சில மாதங் களுக்கு முன்னர் பலர் உயிரிழந்தனர். வெடிபொருள் சோதனை க்கு சென்றபோது இன்ஸ் பெக்டர், சப்.இன்ஸ்பெக்டர், வி.ஏ. ஓ.,க்கள் மற்றும் அதிகாரிகள் 8 பேர் உயிரிழந்தனர். சிவகாசி பட்டாசு ஆலை விபத்து ஒரு தொடர் நிகழ் வாகவே மாறி யிருக்கிறது என்பது வேதனை தரும் செய்தி.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )