Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சொர்க்கம் வேண்டுமா?

எல்லோருக்கம் – சொர்க்கம் வேண்டும் என்ற பிரார்த்தனை எப்போதும் உண்டு. ஒவ் வொரு மனிதனும் தனது மன தாலும் வார்த் தைகளாலும் சரீரத்தாலும் தர்மத்தைக் கடைப்பிடித்து, இறைவன் தனது ஆத்மாவில் இருக்கிறா ர் என்பதை அகப் பார்வை யால் கண்டு, அந்த ஆத்ம- சௌந்தரியத்தை அறிந்து கொள்வதையே ஆத்ம ஞானம் என்று பெரி யோர்கள் நமக்கு உபதேசம் செய்துள்ளனர். ஒவ்வொரு மனிதனும் நரகத்தின் பாதாளத்தில் விழாமல் இருக்க ஆசை, கோபம், பேராசை என்னும் மூன்று ஆபத்தான விஷயங் களி லிருந்தும் தப்பிக்க வேண்டும். ஆசை என்பதில், ஆண்/பெண் ஆசை, பொருளாசை, ஆளுகை ஆசை என்ற மூன்று உண்டு. எறிந்த பந்த திரும்ப வருகிறது போல் கோபம். ஆம், ஆசைப்பட்டு ஒன்று கிடைக்கா விட்டால் அதனால் ஏற்படும் கவலை, கோப மாக மாறுகிறது. பேராசை என்பது பணத்தின் மீது கொண்டுள்ள ஒரு விடாப் பற்று! ஆசையும் கோபமும் வயதாக வயதாக குறையக் கூடும். குறையும், குறையவேண்டும்! ஆனால் இந்த பணம்மீது கொண்ட பற்று, எத்தனை வயதானாலும் மனித னுக்குக் குறை வதே இல்லை.

மனிதனுக்கு ஆசையே கூடாதா? ஆசையே வேண்டாமென்ற புத்தருக்கே கூட ஆசை இல்லாத ஓர் உலகம் வேண்டும் என்ற ஆசை இருந்ததே? – என்ற பல கேள்விகள் நமது மனதில் எழும்.

மனத்தில் எழுகின்ற எண்ணங்களை நல்ல ஆசைகளாக மாற்றி, அதற்கான முயற்சியில் தன்னலம் இல்லாமலும் பெருமைகளை எதிர் பாராமலும் இருந்து செயலாற்றினால் அது உத்தமம்!

அதே பூட்டு ; அதே சாவி! ஒரு பக்கம் திருப்பினால் திறக்கிறது. இன்னொரு பக்கம் திருப்பினால் பூட்டுகிறது. இதே போன்று நமது ஆசைகளை உத்தமமான விஷயங்களுக்கு நாம் திருப்ப வேண்டும். இப்படி நமது எண்ணங்களைச் சீர் செய்தால், தீய ஆசைகள் நம்மை விட்டுப் போகும். இது உறுதி!

அடுத்தது, கோபம் – இதை என்ன செய்ய?

நமது கோபத்தை நம்மிடமுள்ள துர்குணங்களோடு மட்டுமே காட்ட வேண்டும். நாம் கோபத்திலிருந்து விலகி பரிசுத்தம் அடைய, தொடர்ந்து முயற்சித்து வெற்றி பெற வேண்டும். இவ்வழியில் கோபத்திலிருந்தும் விடுதலை உறுதி.

சரி… இனி பேராசையை எப்படி அகற்றுவது?
இறைவன் தருகிற செல்வமானது, வறுமையால் பாதிப்பவருக்க உதவி செய்யத்தான் என்ற புரிதல் நமக்கு வேண்டும். பணத்தை வைத்து மூன்று விஷயம் செய்யலாம். நான்காவதாக ஒன்றும் இல்லை. ஒன்று, வாழும் காலத்தில் இருக்கும் செல்வத்தை அனுபவிக் கலாம். இரண்டு, தமது பிள்ளைகளுக்குக் கொடுக் கலாம். மூன்று -தானம் செய்யலாம். இதைத்தவிர ஒற்றைப் பைசாவைக் கூட சொர்க்கத்திற்கு கொண்டு செல்ல இயலாது.

அதனால்தான் ஆசை, கோபம் இந்த இரண்டிற்குப் பிறகு பேரா சையில் இருந்தும் விடுபட வேண்டும் என்று பெரியோர்கள் உபதேசித் துள்ளார்கள். இந்தச் சிந்தனையின்படி வாழ்க்கையை சரி செய்து கொண்டால் புத்தாண்டு மட்டுமல்ல… வாழும் காலம் முழுமையுமே சொர்க்கம்தான்! -என். சுரேஷ், சென்னை

( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: