Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மேம்படுத்தப்பட்ட ஸ்கூட்டி & அபாச்சிகளை அறிமுகப்படுத்தும் TVS

இந்தியாவின் முன்னணி இருசக்கரவாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் நிறுவனம், தங்கள் நிறுவ னத்தின் மைல்கல் தயாரிப்பான அபாச்சி மற்றும் ஸ்கூட்டி பெப் பிளஸ் வாகனங்களை மேம்படுத்த தரத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப் பட உள்ளதாக தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் (மார்க்கெ‌ட்டிங் பிரிவு) துணை தலைவர் ஹெச் கோயிண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியா மட்டுமல்லாது, சர்வதேச அளவில், தங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புள்ளது. இதனால், மக்களிடையே அதிக வரவேற்பு பெற்ற டிவிஎஸ் அபாச்சி, ஸ்கூட்டி பெப் பிளஸ் வாகனங்களுக்கு மக்களுக்கு மத்தியில் ஏற்பட்ட வரவேற்பே இதற்கு சாட்சி. மக்களின் பேராதரவைப் பெற்ற இந்த வாக ன்ஙகளை, மேலும் அவர்களின் ரசனைக் கேற்ப மேம் படுத்தப்பட்டு புதிய வடிவில் மீண்டும் அறிமுகப் படுத்த உள்ளோம். 150சிசி வாக னங்கள் பிரிவில், அபாச்சி பல விருதுகளை வென்று ள்ளது குறிப்பிடத் தக்கது. அவர் மேலும் தெரிவித் துள்ளதாவது : 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் காலகட்டத்தில், தங்கள் நிறுவன த்தின் வரிகளுக்கு பிந்தைய நிகரலாபம் 2 மடங்கு அதிகரித்து ரூ. 55.75 கோடி என்ற அளவில் உள்ளதாகவும், இது கடந்த நிதியாண்டில், ரூ.23.54 கோடியாக இருந்தது. அதேபோல், நிறுவன த்தின் நிகர விற்பனையும், 51.23 சதவீதம் அதிகரித்து ரூ. 1,089 கோடி யிலிருந்து ரூ.1,647 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் சொல்லப் போனால்,  தங்கள் நிறுவனம் வெற்றிப்பாதையில் சீரான நடைபோட்டு முன்னேறி வருவ தாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: