Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வனிதாவிடம், குழந்தையை ஒப்படைக்க வேண்டும்: முதல் கணவருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் ஆகாஷூம், நடிகை வனிதாவும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். அவர்களின் குழந்தை விஜய் ஸ்ரீஹரி வனிதா வசம் இருக்க வேண்டும் என குடும்ப நலக்கோர்ட்டு உத்தர விட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆகாஷ் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
குடும்ப நலக்கோர்ட்டு மகன் விஜய் ஸ்ரீஹரி, மகள் ஜோவிகா இருவரும் வனிதாவிடம் இருக்க உத்தரவிட்டு உள்ளது. ஆந்திர மாநிலம் செகந்திராபாத் நீதிமன்றத்தில் விஜய் ஸ்ரீ ஹரியை நியூசிலாந்தில் படிக்க வைக்க அனுமதி கேட்டார். நானும் அனுப்ப சம்மதித்தேன்.
அதன் பிறகு வனிதாவுக்கும் அவர் தந்தைக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து விஜய் ஸ்ரீஹரியை வனிதா என்னிடம் ஒப்படைத்தார். பின்னர் மகனை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்கக் கோரி வனிதா ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.
கோர்ட்டும் குழந்தையை வனிதாவிடம் ஒப்படைக்க உத்தர விட்டது. வனிதா மறுமணம் செய்து கொண்டுள்ளார். அவரது 2-வது கணவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 2-வது கணவர் விஜய் ஸ்ரீஹரியை சித்ரவதை செய்துள்ளார். மேலும் விஜய் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல விருப்பம் இல்லை என்று கூறி யுள்ளான்.
எனவே விஜய் ஸ்ரீஹரியும் ஜோவிகாவும் தன்வசம் இருக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை ஐகோர்ட்டு நீதிபதி வி. பாலசுப்பிரமணியன் விசாரித்தார்.   ஆகாஷ் தரப்பில் மூத்த வக்கீல் ஆர். கிருஷ்ண மூர்த்தி மற்றும் வக்கீல்கள் இதயதுல்லா, சசிகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வனிதா தரப்பில் நளினி சிதம்பரம் ஆஜரானார். அவர் கூறும்போது:-
ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் உத்தரவின் பேரில் குழந்தையை வனிதாவிடம் ஆகாஷ் ஒப்படைக்க வேண்டும். ஆனால் இது வரை ஒப்படைக்கவில்லை. ஆகாஷ் மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பி த்தார்.  குழந்தை விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் வக்கீல் நளினி சிதம்பரம் முன்னிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஆகாஷ் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப் பட்டது.

வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதி ஒத்திவைக்கப் பட்டது. அன்றைய தினம் வனிதா விஜய் ஸ்ரீஹரியுடன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதற் கிடையில் ஆகாஷ் வக்கீல் சசிகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வனிதா மீது ஐகோர்ட்டு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்

குடும்ப நல கோர்ட்டில் இன்று ஆஜர்: நடிகை வனிதா பரபரப்பு புகார்; “குழந்தையை பார்க்க விடாமல் தடுக்கின்றனர்”

வனிதாவிடம் மகனை ஒப்படைப்பதற்கு மேலும் இரு வார கால அவகாசம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: