செல்போன் எண்ணை மாற் றாமலே வேறு சேவை நிறுவன த்தை மாற்றிக் கொள்ளும் வசதியை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைத்தார்.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப் பட்ட இத்திட்டம் இன்று தொட ங்கி வைக்கப்பட்டதைத் தொடர் ந்து, இச்சேவை நாடு முழு வதும் அமலானது.
ஏற்கனவே சேவை பெறும் நிறுவனத்தில் நிலுவை ஏதும் இல்லாத வாடிக்கையாளர் தனது செல்போன் இணைப்பை வேறு நிறுவனத் துக்கு மாற்றிக் கொள்ளலாம்.
இந்த வசதியை பெற விரும்புவோர் தங்களது செல்போனில் இருந்து ‘PORT’ என்ற ஆங்கில வார்த்தையையும் செல்போன் எண்ணையும் டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு எஸ்.எம். எஸ் அனுப்பினால் தொலைத் தொடர்புத்துறை ஒரு யூனி கோடு எண்ணை அனுப்பும்.
அந்த எண்ணுடன் வாடிக்கையாளர் விரும்பும் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு விண்ணப்பித்தால் சேவை நிறுவனம் மாற்றித் தரப்படும். இதற்கான கட்டணமாக 19 ரூபாய் மட்டுமே வசூலிக்கப் படுகிறது. சேவை நிறுவனத்தை மாற்றும்போது தங்களது இருப்புத் தொகையை மாற்றிக் கொள்ள முடியாது.
ஆனால் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறிட விரும்பும் வாடிக்கை யாளர்களுக்கு இந்தக் கட்டணத்தை வசூலிப் பதில்லை என்று பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.
இதுதவிர புதிய சிம் கார்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த 7 நாள்களில் புதிய நிறுவனத்தின் சேவை கிடைக்கும். அப்போது புதிய சிம் கார்டைப் பயன்படுத்த வேண்டும். எண் வாங்கி 90 நாள்கள் ஆகியிருந்தால் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும்.
கடந்த நவம்பரில் இந்த வசதி ஹரியானாவில் அறிமுகம் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )