“கலப்புத் திருமணங்களுக்கு, “மதம் இணைந்த விழா, மத நல்லி ணக்க விழா’ என, புதிய பெயர்களை வைப்பது குறித்து ஆலோசி த்து வருகிறோம். மற்ற வர் களுடன் கலந்து பேசி, புதிய பெயரை விரைவில் அறிவிக்கிறேன்,” என முதல்வர் கருணாநிதி பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., அமைப்புச் செயலர் டி.கே.எஸ்., இளங்கோவன் மகள் மாதவிக்கும், ஜான் விஜய் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் வாழ்த்தி பேசியதாவது: இரண்டு இனங்கள், இரண்டு மதங்கள், இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என, இருவர் இணைந்து திருமணம் செய்து கொள் வதை கலப்புத் திருமணம் என அழைக்கிறோம். அப்படி இல்லாமல் அதற்கு வேறு நல்ல பெயர் வைக்க வேண்டும் என, சட்டசபையில் கேட்பதைப் போல், புதிய பெயர் வைக்க வேண்டும் என, பீட்டர் அல்போன்ஸ் எனக்கு ஆணையிட்டுள்ளார். இதை சட்டசபையில் அறிவிப்பது போல் உடனடியாக எழுந்து அறிவித்து விட முடியாது. இது குறித்து நான் மட்டுமே முடிவு செய்யாமல், மதம் இணைந்த விழா, மத நல்லிணக்க விழா அல்லது எதுவுமே இல்லாமல் வெறுமனே திருமண விழா என, அழைப்பதா என்பதை மற்றவர்களுடன் கலந்து பேசி அறிவிக் கிறேன். பார்லிமென்ட்டில் மகளிர் மசோதா நிறைவேற்றப் படுவதற்கு முன் அறிவித்து விடுகிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )