Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காங்கிரஸ் எச்சரிக்கை: கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் . . . .

கர்நாடகத்தில் முழு அடைப்பு காரணமாக சட்டம் – ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசே முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா எச்சரிக்கை விடுத்து உள்ளார். கர் நாடக சட்டசபை எதிர்க் கட்சி தலைவர் (காங் கிரஸ்) சித்த ராமையா, நேற்று பெங்களூரில் நிருபர்களிடம் கூறிய தாவது:-
நிலமுறைகேடு புகார் தொடர்பாக வக்கீல்கள் கொடுத்த மனுவை ஏற்றுக் கொண்ட கவர்னர், முதல்- மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரி அசோக் ஆகியோர்மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உள்ளார். கவர்னரின் இந்த நடவடிக்கை சட்டத்துக்கு உட்பட்டது. கவர்னர் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து உள்ளார். அடுத்த கட்டமாக கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்.
இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக பா.ஜனதாவினர் மக்களை திசை திருப்பி வருகிறார்கள்.  இது மட்டும் அல்லாமல் முழு அடைப்பு போராட்டத் துக்கும் அழைப்பு விடுத்து உள்ளனர். இந்த முழு அடைப்பு மூலம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அரசே பொறுப்பு. ஏனென்றால் ஆளும் கட்சியினர்தான் முழு அடைப்பு செய்கிறா ர்கள். எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடந்து விடாதபடி அரசு பார்த்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் பின் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும். இவ்வாறு சித்த ராமையா கூறினார்.
ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவர் குமாரசாமி கூறியதாவது:-
முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள்மீது நேரடி குற்றச்சாட்டு ஏற் படும் போது, அவர்கள் மீது வழக்கு தொடர கவர்னரிடம் அனுமதி கேட்க யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு. அதன் அடிப்படையில் 2 வக்கீல்கள் அனுமதி கேட்டனர். வக்கீல்கள் கொடுத்த ஆதாரங்களை அடிப்படையாக கொண்டும், அரசியல மைப்பு சட்டத்துக்கு உட்பட்டும் கவர்னர் அனுமதி கொடுத் துள்ளார். இதில் எந்த ஒரு அரசியலும் இல்லை. அரசை கவிழ்க்கும் முயற்சியும் இல்லை. பழிவாங்கும் நோக்கமும் கிடையாது. ஆனால் பா.ஜனதாவினர் தேவையில்லாமல் விவா தம் செய்கிறார்கள். எடியூரப்பாவுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இருந்தால் அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு குமாரசாமி கூறினார்.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியதாவது:-
நிலமுறைகேடு வழக்கில் முதல்-மந்திரி எடியூரப்பா சிக்கி உள்ளார். அவர் மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று வக்கீல்கள் கவர்னரை கோரி உள்ள நிலையில் எடியூரப்பா மந்திரி சபையை கூட்டி எடியூரப்பா தீர்மானம் என் மீது வழக்கு தொடர அனுமதிக்ககூடாது என்று தீர்மானம் போட்டு அதை கவர்னருக்கு அனுப்பி வைத்தார். மந்திரி சபையில் தீர்மானம் போட்டால் அதை கவர்னர் ஏற்று தான் ஆக வேண்டும் என்று அவர் நினைத்து விட்டார். மந்திரி சபை தீர்மானம் என்ற பெயரில் அவர் கவர் னருக்கு கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார்.
அவர் எழுதிய கடிதம் கவர்னரை மிரட்டும் வகையிலும், அவரது பணியை தடுக்கும் வகையிலும் உள்ளது. கவர்னருக்கு எடியூர ப்பா எழுதிய கடிதம் மூலமே அவர் தவறு செய்தது உறுதியாகி உள்ளது. இந்த கடிதமே ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கோருவதற்கு மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. எடியூரப்பா கவர்னரை மட்டும் அல்லாமல் அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதித்துவிட்டார். எடியூரப்பா அரசு பல்வேறு தவறுகளை செய்து வந்தது. அதை ஆரம்பம் முதல் கவர்னர் கண்டித்து வந்தார். ஆனால் எடியூரப்பா அப்போது செவி கொடுத்து கேட்க வில்லை. இதனால் அவர் தற்போது பிரச்சினையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: