ஆங்கிலம் தவித்து பிற மொழியாளர்களின் பயன்பாட்டிற்காக இணையதளத்தின் வசதிகளை அதிகரிக்க கூகுள் நியூஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை இந்த ஆண்டு முதல் அமலுக்கு கொண்டு வரவும் கூகுள் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்படி ஆங்கிலத்தில் உள்ள அனைத்து வசதிகளும் ஜப்பான் மொழி உட்பட அனைத்து மொழி காரர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் இணையத்தின் வேகம் குறைவாக இருந்தாலும் அடுத்த 8 முதல் 10 விநாடிகளில் தானாக சரியாகி தொலைக்காட்சியில் காண்பதைப் போன்றே உடனடி செய்திகள் பெறும் வசதியும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )