Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சட்டசபை தேர்தலில் முறைகேட்டை தடுக்க வாக்குச்சாவடியில் கேமரா பொருத்த உத்தர விடவேண்டும்; ஐகோர்ட்டில் வக்கீல் வழக்கு

சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வரும் முத்து ராஜா என்பவர் ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந் துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப் பதாவது:-
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் வன் முறை இல்லாமலும் நடக்க தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் கடந்த மாதம் 27-ந்தேதி மனு கொடுத்தேன். அந்த மனுவில் தேர்தல் வாக்குப்ப திவின் போது வாக்குச் சாவடிகளை கைப் பற்றுதல், மின்னணு எந்திரங்களை கைப்பற்றுதல், எந்திரத்தில் முறைகேடு செய்து வாக்கு செலுத் துதல் போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க ஒவ்வொரு வாக்குச் சாவடி முன்பும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி வாக்குப் பதிவை பொதுமக்கள் நேரடியாக பார்க்க ஒளி பரப்ப வேண்டும்.
மேலும் வாக்காளர்கள் பணம் பெறுவதை தவிர்க்க விஞ் ஞானிகள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் மூலம் விழிப் புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத் திடம் கேட்டிருந்தேன்.  எனது மனு மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. வட இந்தியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலின்போது வாக்காளர்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்த இந்த நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அதேபோல் தமிழ் நாட்டிலும் சட்டசபை தேர்தலில் இந்த நடைமுறையை அமுல் படுத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தர விடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் தர்மாராவ், ஹரி பரந்தாமன் ஆகியோரை கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் மகாராஜா ஆஜராகி வாதாடினார்.
இந்த மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத் துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தர விட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை வருகிற 24-ந் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: