Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருச்சி மலைக்கோட்டை சிறப்புகள்

ந‌மது இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அமைந்துள்ளது. அதுவும் திருச்சியில் அமைந்து, நமக்கு பெருமை தேடித்தந்து கொண் டிருக்கிறது. அதனுடைய சிறப்புக்களை இங்கே காணலாம்.

1. பல்வர்களின் சிற்பக்கலையின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக‌ திருச்சி மலைக்கோட்டையில் உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளது.

2. தரையில் இருந்து மலை உச்சியில் இருக்கும் உச்சி பிள்ளையார் கோவில்வரை மொத்தம் 418 படிக்களை கொண்டது. ஒவ்வொரு படிக்கட்டுமே குறைவான உயரத்தில் அமைந் துள்ளது. இந்த படிக் கட்டில், வயதானவர்கள், நோயுற் றவர்கள், சிறுவர்கள் என எவரும் எளிதில் ஏறி உச்சிப் பிள்ளையார் கோவிலை அடைய முடிகிறது.

3. உச்சி பிள்ளையார் கோவிலை அடைவதற்கு சற்று முன் இடப் புறமாக அமைந்துள்ள அழகிய‌ பல்லவ கால குகையும் உண்டு, அந்த குகையில் பல்வேறு சிற்பங்களை செதுக்கி வரலாறு படைத்துள்ளனர் பல்லவர்கள்

4. திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவிலில் அழகிய வேலைப் பாடுகளுடன் ஒரு கல்லில் செதுக்கப்பட்ட‌ கல்லாலான சங்கலியை விட்டத்திலிருந்தே தொங்கிக் கொண்டிருப்பதை காணலாம்.

தொடரும். . .

த‌கவல்- விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: