Sunday, March 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெ‌ரிய ‌ஜினியஸ் கமல் பற்றி த்‌ரிஷா . . .

விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் அம்பு ஆகியவை சென்ற வருடமும் கோலிவுட்டின் டார்லிங் த்‌ரிஷாதான் என்ப தை நிரூபித் திருக்கின்றன. இந்தியில் அறிமுகமானது இன் னொரு விசேஷம். புது வருடத்தில் அ‌ஜித் துடன் அமர்க்களமாக மங்காத்தா ஆடத் தொடங்கியிருப்பதால் மகிழ் ச்சியாக இருக்கிறார் த்‌ரிஷா. மன் மதன் அம்பில் கமலுடன் நடித்த அனுபவ மணம் மாறாமல் வருகி ன்றன த்‌ரிஷாவின் வார்த்தைகள்.

த்‌ரிஷா ரசிகர்களுக்கு வருடக் கடைசியில் அவர் பாடியது காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்த அனுபவம் . த்‌ரிஷா இனி தொடர்ந்து பாடுவாரா?

ஆய்த எழுத்துக்குப் பிறகு மன்மதன் அம்பு படத்துக்காக சொந்தக் குரலில் பேசினேன். கமல் சார் கேட்டுக் கொண்ட தாலும், பாடுவது கமல் சாருடன் என்பதாலும் அந்தப் படத்தில் பாடினேன். மற்றபடி நடிக்கவே எனக்கு நேரமில்லை. ஆனால் சந்தர்ப்ப சூழல் அமைந்தால் மீண்டும் பாடுவேன்.

இந்திக்கு சென்ற அசின் அங்கேயே செட்டிலாகிவிட்டார். இந்திதான் எனது இலக்கு என முடிவெடுத்து மும்பையில் தங்கி யிருக்கிறார் லட்சுமிராய். த்‌ரிஷாவும் பாலிவுட் பக்கமாக ஒதுங்கி விடுவாரோ என்பது அவரது ரசிகர்களின் பயம்.

சென்ற வருடம் கட்டா மிட்டாவில் நடித்தது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம். படம் ச‌‌ரியாகப் போக வில்லை  யென் றாலும் என்னை அறிமுகப்படுத்திய ப்‌ரியதர்ஷனுக்காக நடித்தது ரொம்பவே நிறைவைத் தந்தது. ஆனால் தொடர்ந்து இந்தியில் நடிக்கிற எண்ணம் இல்லை. தென்னிந்தியாவில் என்னுடைய மார்க்கெட் நன்றாக இருக்கிறது. அதை தக்க வைத்துக் கொள்வதில்  தான் என்னுடைய கவனம் முழுவதும் இருக்கிறது. பெ‌ரிய பட்ஜெட் படம் என்றால் மட்டும் இந்தியில் நடிப்பது பற்றி யோசிப்பதாக இருக்கிறேன். இப்போதைக்கு இந்தியில் நடிக்கும் எண்ணம் எதுவுமில்லை.

த்‌ரிஷா கடைசியாக நடித்த தமிழ்ப் படம் மன்மதன் அம்பு, கமல் ஹீரோ. தற்போது நடித்துவரும் படம் மங்காத்தா, அ‌ஜித் ஹீரோ. தெலுங்கிலும் பவன் கல்யாண், வெங்கடேஷ் என்று முன்ன ணி நடிகர்களாகத்தான் இருக்கிறது த்‌ரிஷாவின் சாய்ஸ். இளம் நடிகர் களை த்‌ரிஷா விலக்குகிறாரா?

அப்படியெல்லாம் இல்லை. நல்ல கதை, கேரக்டர் அமைந்தால் யாருடனும் நடிப்பேன். சர்வத்தில் ஆர்யாவுடன் நடித்திருக்கி றேனே. விண்ணைத்தாண்டி வருவாயில் சிம்பு தானே ஹீரோ.

சென்ற வருடம் வெளியான த்‌ரிஷாவின் படங்கள் இரண்டு; ஹிட், ஒன்று சுமார். த்‌ரிஷாவுக்கு இதில் திருப்தியா?

இந்தியில் கட்டா மிட்டாவில் நடித்ததும், விண்ணைத்தாண்டி வருவாயில் நடித்ததும் சென்ற வருடத்தின் மிகப்பெ‌ரிய அனுபவம். விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி கேரக்டர் என்னை இளம் பெண்கள் அனைவ‌ரிடமும் கொணடு சோர்த்தது. அப்படியொரு கேரக்டர் இனி கிடைக்குமா என்று ஏக்கத்தில் இருந்த போது கமல் அழைத்து மன்மதன் அம்பில் அம்பு‌ஜி கேரக்டரை தந்தார். விண்ணைத் தாண்டி வருவாயா போலவே இதுவும் முக்கியமான கேரக்டர்.

கமல்…?

பெ‌ரிய ‌ஜினியஸ். அவ‌ரிடம் எதைப் பற்றியும் கேட்கலாம். எல்லா வற்றுக்கும் அவ‌ரிடம் விளக்கம் கிடைக்கும். ஒரு நாட்டுக்கு செல்லும் போது அங்குள்ள அரசியல் நிலவரம் தொடங்கி வரலாற்று சம்பவங்கள், முக்கியமான இடங்கள் என அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பார். அவரை ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் என்று சொல்லலாம். என்னை பொறுத்தவரை நடிக்கிற ஒவ்வொரு நாயகியும் கமல் சாருடன் ஒரு படத்திலாவது இணைந்து பணிபு‌ரிய வேண்டும். அவ‌ரிட மிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்.

சென்ற வருடத்தைப் போலில்லாமல் இந்த வருடம் அதிகப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் த்‌ரிஷா. இதில் தெலுங்குப் படங்களும் அடக்கம்.

தற்போது அ‌ஜித்துடன் மங்காத்தாவில் நடித்து வருகிறேன். வெங்கட் பிரபு இயக்குகிறார். நிறைய நடிகர்கள் இருப்பதால் எனக்கு நடிப்பதற்கான ஸ்கோப் அதிகம் இருக்கிறது. தெலுங் கில் பவன் கல்யாண்   ஜோடியாக நடிக்கிறேன். இது இந்தியில் வெற்றி பெற்ற லவ் ஆ‌ஜ் கல் படத்தின் ‌ரிமேக். தெலுங்கில் நடிக்கிற இன்னொரு படம் சாவித்‌ரி.

( இணையம் ஒன்றில் கண்டெடுத்தது )

Leave a Reply