Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (23)

அன்புள்ள அம்மாவிற்கு—

என் தந்தை, சொற்ப வருமானம் தரும் சுயதொழில் செய்கிறார்; அம்மா இல்லத்தரசி. என் பெற்றோருக்கு இரண்டு பெண்கள். நான் இளையவள். என் அக்கா ஒரு பெண்ணீயவாதி. நாங்கள் இருவருமே பட்டதாரிகள். எனக்கு திருமணமாகி, 15 ஆண்டுகள் ஆகிறது. என் அக்காவோ திருமணமே வேண்டாம் என இருக்கிறாள்.

என் கணவரும், வீட்டில் மூத்த மகன்; அவருக்கு இரு தங்கைகள். அவரது தந்தை, தாய் இருவரும் அரசுப் பணியில் இருக்கின்றனர். என் கணவர் சராசரி உயரம். கறுப்பு நிறமுள்ளவர். புகைபிடிக்கும் பழக்கம் தவிர, வேறெந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவர். “மெடிக்கல் ரெப்’ பாக பணிபுரியும் அவர், முதுகலை மருந்தியல் படித்தவர். பின்னாளில், அவர் ஐதராபாத்தில் மெடிக்கல் டூரிசம் படிக்கும் போதுதான், என் திருமண வாழ்க்கையில் பூகம்பம் வந்தது.

நகைச்சுவையாக பேச ஆரம்பித்தால், நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் இவர் காலுக்கு கீழே. ஆண் – பெண் பேதமில்லாமல், எல்லாருடனும் இனிமையாய் பழகுவார். வீட்டுக்கு யார் வந்தாலும், வாய் திறந்தால் காகம் கொத்திப் போகும் அளவுக்கு, விருந்து சமைத்துப் போடச் சொல்வார். உதவி கேட்டு வருபவர்களுக்கு சளைக்காமல், பண உதவி செய்வார்.

எனக்கும், அவருக்கும் சண்டை வருவது அபூர்வம். சமீபத்திய பிரச்னை வெடிக்கும் வரை, அவர் என்னை அடித்ததில்லை. பெரும்பாலும், சண்டைக்குப் பின், சமாதானக் கொடி காட்டுவது நான் தான். எங்களின் ஒரே மகனுக்கு, வயது 12; ஏழாம் வகுப்பு படிக்கிறான். வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சி.

அம்மா… எனக்கு, என் புருஷன் மீதிருக்கும் பாசத்தை, அனுமன் போல் நெஞ்சைக் கிழித்து உங்களிடம் காட்டத் தெரியாது. அவரை, என் மூத்த மகன் போல் பாவிக்கிறேன். அவருக்கு நான் செய்யாத பணிவிடைகள் பாக்கி இல்லை. அவர் என்ன சொன்னாலும் முறுவலிப்பேன்.

இரண்டு வருடங்களுக்கு முன், என் கணவர் 15 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பிரபல மருந்து கம்பெனியில் ஷேர்கள் வாங்க, நகையை அடகு வைத்து, அப்பாவிடம் பகுதி பணம் வாங்கி கொடுத்து உதவினேன்.

பத்து வருடங்களுக்கு முன், என் கணவருடன் திருமணமாகாத பெண் ஒருவர் பணிபுரிந்திருக்கிறாள். அவள், இவரை ஒரு தலையாய் காதலிக்க, இவர் கண்ணியமாக மறுத்திருக்கிறார். காதல் மறுக்கப் பட்ட ஆத்திரத்தில், அவள் வேலையை ராஜினாமா செய்திருக் கிறாள். வேறொரு மருந்து கம்பெனியில் பணி சேர்ந்து, வேறொரு வரையும் திருமணம் செய்து கொண்டாள்.

ஒன்பது வருடங்களாக பேசாமல் இருந்தவள், கடந்த இரண்டு வருடமாக என் கணவரிடம் மீண்டும் மொபைல் போனில் பேசி, அவரின் அனுதாபத்தை பெற்றிருக்கிறாள். கல்யாணமாகி ஒன்பது வருடமாகியும், அவளுக்கு குழந்தை இல்லை. கல்யாணத்துக்கு பின்னும், தன்னையே அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள் எனும் இரு செய்திகள், என் கணவரை அவள் பக்கம் இழுத்திருக்கிறது.

போன்மூலம் தொடர்ந்து பேசியவர், ஒரு கட்டத்தில் அவள் இருக்கும் ராஜபாளையம் முகவரிக்கு போய், நேரில் சந்தித்திருக்கிறார். காதலி ஒன்பது ஆண்டுகளுக்குபின் கர்ப்பம். காதலிக்கு பிறந்த குழந்தை யை, முதன் முதலில் தான்தான் பார்க்க வேண்டும் என அடம்பிடித்து பார்த்திருக்கிறார். ராஜபாளையத்துக்காரியுடன் பழகும்போதே, ஐதரா பாத்தில் தன்னுடன் மெடிக்கல் டூரிசம் சேர்ந்து படித்த, 45 வயது திருப்பதி பெண்ணுடனும் நட்பாகி இருக்கிறார் என் கணவர். திருப்பதி பெண்ணிற்கு, சித்த மருத்துவம் படிக்கும் மகளும், இசைக் கல்லூரி யில் படிக்கும் மகனும், ரியல்எஸ்டேட் பிசினஸ் செய்யும் கணவரும் உண்டு.

இந்த இரு பெண்களுடன் பழக ஆரம்பித்த பின், என் கணவரின் குணமே தலைகீழாய் மாறிப் போனது. அவ்விருவரையும், அம்மா என்று அழைக்கும்படி என் மகனை கட்டாயப்படுத்துகிறார்… ராஜ பாளையத் துகாரிக்கு குழந்தை பிறந்தால், எனக்கு குடும்பக் கட்டுப் பாடு செய்வதாக வேண்டியிருந்தாராம் என் கணவர். இப்போது என்னை, கு.க., பண்ணச் சொல்கிறார்.இவரது திருப்பதி தொடர்பை, ராஜ பாளையத்துகாரியிடம் சொன்னேன். உடனே, அவள் என் கணவ ரிடம், “திருப்பதியை கத்தரித்துவிட்டு வந்தால்தான் தொடர்ந்து பழகுவேன்…’ என, மிரட்டியிருக்கிறாள். திருப்பதி பெண்ணிடம், “என் கணவனை எனக்கு மடிப்பிச்சை தந்துவிடு…’ என, போனில் அரைகுறை தெலுங்கில் கெஞ்சினேன். திருப்பதி பெண்ணின் கணவர் மொபைல் நம்பரை கண்டுபிடித்து, அவரின் மனைவியை கண்டிக்கச் சொன்னேன். அவரோ, “மனைவி சொக்கத் தங்கம்…’ என்கிறார்.

நான் கணவரின் இரு காதலிகளையும், உசுப்பேற்றி விட்டதால், என்னை அடித்து, என் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டார். திருப்பதி பெண்ணிடம், மன்னிப்பு கேட்க வேண்டுமாம் நான். அத்துடன் நில்லாது, அவரின் காதல் லீலைகளில் குறுக்கே நில்லாது அமைதி காக்க வேண்டுமாம். அப்படி இருந்தால், என்னை மீண்டும் குடும்பம் நடத்த அழைத்துக் கொள்வாராம். இவரது தீய நடத்தை, மகனின் எதிர்காலத்தை பாழாக்கி விடுமோ என அஞ்சுகிறேன்.

என் பெற்றோர், எனக்கு உதவும் நிலையில் இல்லை. மாமனார், மாமியார் இருவரும் என் கணவருக்கு ரகசிய ஒத்துக்கை. படித்து, பெரிய வேலையில் இருக்கும் பெண்ணீயவாதி அக்காவோ, என்னை யும், மகனையும் தன்னுடன் வைத்து பராமரிக்க விரும்பு கிறாள். எனக்கு வேலை வாங்கித் தந்து, என் மகனை விரும்பிய படிப்பை படிக்க வைக்கிறாளாம்.

என் கணவர் கோரியபடி, திருப்பதி பெண்ணிடம் நான் மன்னிப்பு கேட்க லாமா? என் அன்பு கணவனை மீட்டெடுக்க என்னம்மா செய்ய லாம்? இன்னமும் என் கணவனை கண்மூடித்தனமாக காதலிக் கிறேன்.

— இப்படிக்கு நிராதரவாய் நிற்கும், அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு—
உன் கண்ணீர் கடிதத்தை வாசித்தேன். “கணவனே கண்கண்ட தெய்வம்’ என, ஜெபிக்கும் உன்னைப் போன்ற பத்தினிப் பெண்கள் இருப்பதால் தான், தமிழகத்தில் பண்பாடும், கலாசாரமும் இன்னும் ஜீவிக்கின்றன. உன் நான்கு பக்கக் கடிதத்தில், உன் கணவரின் மீது, உனக்கிருக்கும் காதலை இரண்டு முழு பக்கம் விவரித்திருக்கிறாய்.
“பதிபக்தி’ கேள்விப்பட்டிருக்கிறேன்; “பதிகாதல்’ கேள்விப் பட்டதில் லை. கடிதத்துடன் கணவன், மகனுடன், நீ இருக்கும் புகைப்படம் இணைத் திருந்தாய். பார்க்க மகாலட்சுமி போல் இருக்கிறாய். இரு கை கூப்பி, வணங்க தோன்றுகிறது.

சரி… உன் கணவனின் செய்கைகளுக்கான காரணங்களை ஆராய் வோம்.

1. நீ, உன் கணவனுக்கு மனைவியாக மட்டும் இருக்கவில்லை. விசு வாசியாக, தாதியாக, பக்தையாக, விருப்ப அடிமையாக இருந்திருக் கிறாய். அது, உன் வாழ்வில், ஒரு எதிர்மறை விளைவை ஏற்படுத்தி விட்டது. முதல் 13 வருடம், உனக்கு உண்மையாக இருந்த கணவ னுக்கு, ஒரு கட்டத்தில் பயமற்று போய் விட்டது. திருமணபந்தம் மீறிய உறவுகளையும், மனைவி சிரித்த முகத்துடன், சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பாள் என, தப்புக்கணக்கு போட்டு விட்டான் உன் கணவன்.

2. திருமணம் ஆன தம்பதிகளுக்கு, “செவன்த் இயர் இச்’ என்ற,”ஏழாம் வருடம் நமைச்சல்’ என்ற, பரஸ்பர வெறுப்பு பூக்கும். திருமணமான ஏழாம் வருடம், 14ம், 21ம், 28ம் வருடம் இப்படி. இப்போது, உங்களுக்குள் இரண்டாம், “செவன்த் இயர் இச்’ வந்திருக்கிறது.

3. திருமண வாழ்க்கையில் ஒழுக்கமாய் இருக்கும் சில பல ஆண்கள், 40 வயதுக்குப் பின், சபலக் கேஸ்களாக மாற யத்தனிக்கின்றனர். “இன்னும் தனக்கு இளமை இருக்கிறது. கல்யாணமான நாற்பது வயது சுமார் ஆணை நேசிக்கவும் பெண்கள் வருகின்றனர்…’ என்பதை,  நிரூபணம் செய்ய துணிகின்றனர்.

4. மொபைல் போனில் ஆயிரம் உபயோகங்கள் இருக்கலாம். மொ பைல் போன் வருவதற்கு முன், தவறான ஆண் – பெண் உறவு 1 சத வீதம் என்றால், 110 கோடி மக்கள் உள்ள இந்தியாவில், 70 கோடி மொபைல் போன் சந்தாதாரர்கள் பெருகியிருக்கும் இப்போது, தவ றான ஆண் – பெண் உறவு, 200 சதவீதமாக பெருகியுள்ளது. உன் கணவரும், ஒரு மொபைல் போன் விக்டிம்தான்.

5. சுமார் பெர்சனாலிட்டி ஆண்கள், நகைச்சுவையாக பேசுவதே பெண்களைக் கவரத்தான். உருவத்தால் முடியாதததை, வார்த்தை களால் முயற்சிக்கின்றனர். இப்போது, உன் கணவன் இரு பெண்க ளுடன் வைத்திருக்கும் தொடர்பு கூட, உன் கணவனின் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுதான். இனி, என்ன செய்யலாம் என்கிறாயா?

நீ, உன் பெற்றோர் வீட்டிலேயே இருந்து, அக்கா வாங்கித் தரும் வேலைக்கு போ. உன் மகனிடம் தனிமையில், “இனி அந்த பெண்களை, அம்மா என கூப்பிடாதே…’ என, இதமாகச் சொல். அப்பாவின் செய்கை, உன்னை விட, அவனின் எதிர்காலத்தைதான், முழுமையாக பாதிக்கும் என்பதைச் சொல்.

திருப்பதி பெண்ணிற்கு ரேஷன் கார்டு வழங்கும் அளவுக்கு, ஆண் நண்பர்கள் இருப்பர். வெகுசீக்கிரம், அவளாகவே உன் கணவரிட மிருந்து விலகி விடுவாள். ராஜபாளைய பெண்ணை வெட்டி விடுவது தான் சிரமம். “இரு தொடர்புகளையும் நிரந்தரமாக கத்தரித்து விட்டு வந்தால், மீண்டும் குடும்பம் நடத்த வருவேன். திருப்பதி பெண்ணிடம் ஒரு நாளும் மன்னிப்பு கேட்க மாட்டேன்…’ என, உன் கணவனிடம் சொல். சாது மிரண்டால், காடு கொள்ளாது என்பதை, உன் கணவனுக்கு காட்டு.

இனி, எக்காரணத்தை முன்னிட்டும், உன் திருமண பந்தத்தில், சுய கவுரவத்தை விட்டுக் கொடுக்காதே. < உன் கணவரின் இரு தொடர்புகள், அவரது எதிர்கால வாழ்வை சூன்யமாக்கி விடும் என்பதை, அவருக்கு கடிதமாக எழுதி அனுப்பு.

உடனடியாக, உன் கணவன் திருந்தி வரவில்லை என்றால், நோ ப்ராப்ளம். பொருளாதார சுதந்திரக் காற்றை, நீயும், உன் சகோதரியும், நன்கு சுவாசியுங்கள். பதறாத காரியம் சிதறாது. உன்னையே சார்ந்து வாழ்ந்துவிட்ட உன் கணவன், சுயமாய் செயல்பட திண்டாடுவான்.
என்னுடைய இந்த பதிலை, உன் கணவன் தற்செயலாய் வாசிக்க நேர்ந்தால், அவனுக்கு ஓர் வேண்டுகோள்:

“மகனே… உன் மனைவி தேவதைகளின் தெய்வம். அவள் உனக்கு கிடைத்தது நீ முற்பிறவியில் செய்த நன்மைகளின் பிறவிப் பயன். இரு மூதேவிகளை உதறு. மகனின் எதிர்காலத்துக்காக, மடியி லிருக்கும் ஓணான்களை எடுத்து, வேலியில் விடு. சாந்தலட்சுமியை, ஓங்கார காளி அவதாரமாக்கும் ஜொள்ளு நடவடிக்கையை கை விடு. நீயும், உன் மனைவியும் மீண்டும் இணைந்து, என்னை விருந் துண்ண அழைத்தால், வாய் திறந்தால் காகம் கொத்தும் அளவுக்கு, விருந்து உண்ண நான் தயார்!’

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: