Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்நாடகாவில் பந்த் : பஸ்கள் எரிப்பு, கடைகள் அடைப்பால் பதட்டம்

கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதியளித்த, கவர்னர் பரத்வாஜை கண்டித்து பா. ஜ., வினர் நடத்திய போரா ட்டம், வன்முறை யாக மாறியது. பல இடங் களில் கவர்னரின் கொடும் பாவி எரிக்கப்பட்டது, பஸ்கள் கொளுத்தப்பட்டன; நூற்று க்கும் மேற்பட்ட பஸ்கள் கல் வீசி தாக்கப் பட்டன. இதனால், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகள் அடைக்கப் பட்டதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

நிலமோசடி புகார் தொடர்பாக, முதல்வர் எடியூரப்பாமீது வழக்கு தொடருவதற்கு அனுமதி கேட்டு, ஷிமோகாவைச் சேர்ந்த ஜஸ்டிஸ் போரத்தின் வக்கீல்கள் பால்ராஜ், சிராஜின் பாஷா ஆகியோர், கடந்த டிச., 28ம் தேதி, கவர்னர் பரத்வாஜிடம் மனு கொடுத்தனர். பெங்களூரில் பா.ஜ., தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் போதே, கவர்னர் பரத்வாஜ், முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதியளித்தார். இதனால், பா.ஜ., தலைவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர் .வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளித்த நகல் தனக்கு கிடைக்க வில்லை என்றும், மீடியாக்கள் மூலம் தான் தெரிந்து கொண்டேன் என்றும் முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதி யிருந் தார். இதனால், கர்நாடகாவில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட் டது. பா.ஜ.,வினர் வன்முறையில் இறங்கலாம் என, தகவல்கள் வெளியாயின.

நேற்றிரவிலிருந்து ராஜ்பவன் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவிலிருந்தே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.,வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பல பகுதிகளில் நடுரோட்டில் டயர் களை போட்டு கொளுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடகாவில், 22ம் தேதி பந்த் நடத்தப்படும் என்று பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா நேற்று முன்தினம் நள்ளிரவு அறிவி த்தார். நேற்று அதிகாலையிலிருந்தே பா.ஜ.,வினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பா.ஜ., பலம் வாய்ந்த பகுதிகளில் போராட்டம் கடுமையாக இருந்தது.

சட்டம் ஒழுங்கு ஏ.ஜி.டி.பி., இன்பான்ட் கூறுகையில், “”தாவண கரே மாவட்டம், ஹொன்னாளியில் இரண்டு அரசு பஸ்களும், பெங்களூரில் தனியார் பஸ் ஒன்றும் தீ வைத்து கொளுத் தப்பட்டன,” என்றார்.

ஆனால், 25க்கும் மேற்பட்ட பஸ்கள் கொளுத்தப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சங்கர் பிதரி கூறுகையில், “பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில், 48 மணி நேரம், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் உள்ளிட்ட 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகர ஆயுதப் படையினர், மாநில ஆயுதப் படையினர் உட்பட பாதுகாப்பு பிரிவு போலீசார் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். பதட்ட மான பகுதிகளில் விழிப்புடன் செயல்படுமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

இந்நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் பா.ஜ.,வினர் நடத்திய போராட்டம், வன்முறையாக மாறியது. பெங்களூரு உட்பட சில பகுதிகளில் பஸ்கள், தீ வைத்து கொளுத்தப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சினிமா தியேட்டர்கள், வங்கிகள் இயங்கவில்லை. பெரும்பாலான கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. அதிகாலையில் இயக்கப் பட்ட சில பஸ்கள் மீது கல் வீசப்பட்டதால், பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பல பகுதி களில் பஸ்கள் உடனடியாக டிப்போவுக்கு கொண்டு செல்லப் பட்டன. காலை 10 மணிக்கு மேல், எந்த பஸ்களும் இயக்கப் படவில்லை. இதனால், பயணி கள் கடுமையாக திணறினர்.

சிக்மகளூரு பகுதியில், ம.ஜ.த., தலைவர் போஜே கவுடா, தன் கடையை திறக்க முற்பட்ட போது, சிலர் அவர் மீது கல் வீசியதால் படுகாய மடைந்தார். மைசூரு கே.ஆர்.சர்க்கிளில், கவர்னரின் கொடும் பாவி எரிக்கப்பட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட, பா.ஜ., எம்.எல்.ஏ., சங்கர லிங்கே கவுடா, மூடியிருந்த கடை களை திறக்குமாறும், அவரது மகன் கடைகளை மூடுமாறும் கூறியதால், பரபரப்பு நிலவி யது. ஹாவேரி பகுதியில் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப் பட்டன. ஹாசன், தும்கூர், தாவணகரே, சிக்மகளூரு என மாநிலம் முழுவதும் பா.ஜ., போராட்டத்தால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. மங்க ளூரிலும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெங்களூரில் கவர்னரை கண்டித்து, கவர்னர் மாளிகையை நோக்கி சட்ட அமைச்சர் சுரேஷ்குமார் உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் ஊர்வலமாக சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: