இணயத்தில் நீங்கள் தமிழ் உட்பட எட்டு மொழிகளில் டைப் செய்ய விரும்பினால் . . .
http://www.higopi.com
என்ற இணயதளம் உங்களுக்கு பெரிதும் உதவுகிறது.. ஆம். இதில் தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, இந்தி, கன்னடம், குஜராத்தி, ஒரியா, பெங்காலி மற்றும் பஞ்சாபி ஆகிய இந்திய மொழிகளிலும் டைப் செய் யலாம்.
www.higopi.com என்ற இந்த இணையதளத்திற்கு சென்று, பின் Tools என்ற மெனுவை கிளிக் செய்து, ஸ்கிரீனில் கீழே பார்த்தால், Unicode Converters என்ற தலைப்புக்கு அடியில் வரும் பத்திகளில் நீங்கள் விரும்பும் மொழி, உதாரணமாக தமிழில் டைப்செய்ய நீங்கள் விரும்பினால் . . அந்த Tamil என்ற வார்த்தை கிளிக் செய்து, பின் வரும் ஸ்கீரினில் இடப்புறமுள்ள சைடு பாரில், Thagadoor (Tamil) என்ற வார்த்தையை கிளிக் செய்யுங்கள்.
பின் வரும் ஸ்கீரீனில் Tamil Phonetic, Tamil 99 Keyboard, Tamil Typewriter என்ற வார்த்தைகளை நீங்கள் காணலாம். அதில் உங்களுக்கு எது எளிதாக டைப் செய்ய முடிகிறதோ அதில் கிளிக் செய்து டைப் செய்திடுங்கள்.
Tamil Phonetic என்பது ஆங்கிலத்தில் Aamma என்று நீங்கள் டைப்செய்தால், தமிழில் அம்மா என்று அச்சாகும்.
Tamil 99 Keyboard – இதில் தமிழை மிக எளிதாக டைப் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உயிர், மெய் எழுத்துக்கள் முறையே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
Tamil Typewriter – இதில் பழைய காலத்தில் தட்டச்சு முறையில் எழுத்துக்கள் அச்சு வடிவமைக்கப்பட்டுள்ளது.
என்ன ? இனி உங்களுக்கு, நீங்கள் விரும்பும் மொழிகளில் டைப் செய்திடலாம்.