தஜிகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி
அடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்த தஜிகிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மலைப் பிரதேசத்தில் காராகுல் நகரம் உள்ளது. இது சீன எல்லையில் அமைந்துள்ளது. இங்கு இன்று காலை 7.45 மணி அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பாத்திரங்கள் உருண்டோடின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். சிறிது நேரம் கழித்து வீடுகளுக்கு திரும்பினர்.
இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதற் கிடையே இங்கு 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(((((( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))))