குருத்துவாராவில் நடந்த கலவரத்தில் சீக்கியர்கள் பலர் கொல்லப் பட்டனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்கள் சார்பில் அமெரிக் காவில் தொடரப் பட்ட வழக்கு மத்திய அமைச்சர் கமல் நாத்தை கைது செய்யும் சூழல் வரை கொண்டு போகும் சச்சரவு துவங்கியிருக் க்கிறது.
இந்த பிரச்னையை எப்படிக் கையாள்வது என ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு தற்போது யோசனையில் இறங்கி யுள்ளது. 1984 ம் ஆண்டில் பஞ்சாபில் இந்திரா கொலையை அடுத்து ஏற்பட்ட கலவரத்தில் சீக்கியர்கள் பலர் எரித்தும், அடித்தும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 27 ஆண்டு கள் கடந்த பின்னரும் இன்னும் இந்த பிரச்னை தொடர்ந்து வருகிறது.
கமல்நாத் முன்னிலையில் தாக்குதல்: நியூயார்க் கோர்ட்டில் சீக்கியர் களுக்கான ஆதரவு உரிமை இயக்கம் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பான பாதிக்கப் பட்டவர்கள் தற்போது அமெரிக்காவில் சிலர் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த மனுவில் 1984 ல் குருத்துவாரா அருகில் நடந்த சம்பவத்தில் சீக்கி யர்கள் தாக்கப்பட்டபோது கமல்நாத் என்பவர் ஈடுபட்டார்.
இவரது முன்னிலையில் நடந்த தாக்குதல் தொடர்பாக இவர் மீது எவ்வித வழக்கும் போடப்படவில்லை. தனக்கு இருந்த அரசியல் செல்வாக்கு கொண்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விட்டார் என்றும், இவருக்கு உரிய தண்டனையும், பாதிக்கப் பட்டோருக்கு நீதி கிடைக்கவும் மனுவில் சரத்துக்கள் கோரப் பட்டுள்ளன.
வழக்கை விசாரித்த கோர்ட் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த சம்மன் இன்னும் கமல்நாத்துக்கு கிடைக்கவில்லை என்றா லும் வந்த வுடன் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிகிறது. மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக இருக்கும் கமல்நாத்துக்கு எவ்வித இடையூறும் செய்ய முடியாது என மத்திய அரசு வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.
சட்ட நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?: இந்திய சட்ட எல்லை க்குள் புகுந்து அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க முடியாது என்றார். இதே நேரத்தில் அமைச்சர் அமெரிக்கா சென்றால் அந் நேரத்தில் அவரை அமெரிக்கா கைதுசெய்யமுடியும் என மற்றொரு வழக்கறிஞர் கூறினார்.கமல்நாத் ஒரு நாட்டின் அமைச் சராக இருந் தாலும், இந்த வழக்கில் அவருக்கு அரசு ரீதியான விதிவிலக்கு அளிக்க முடியாது என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இருந்தாலும் மத்திய அமைச்சகம் இந்த விஷயம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறது. அமெரிக வெளி யுறவு துறை அமைச்சகத்துடன் பேசி மத்திய அமைச்சராக இருப் பதால் உரிய விதி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரப் படும்.
(((((( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))))