Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாக்கு பதிவு நேரடியாக ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

வக்கீல் முத்துராஜ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின் போது வாக்கு சாவடி களை கைப்பற்றுதல், வாக்கு பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்தல், கள்ள ஓட்டு போடுதல் போன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து வாக்கு சாவடி மைங் களிலும் ரகசிய கேமராக்களை பொருத்தி ஓட்டுப் பதிவு நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும். அவற்றை பொது மக்கள் அறியும் வகையில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் ஓட்டுகளை பெற அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் கலாசாரத்தை தடுக்க பொது மக்கள் மத்தியில் பொதுவான பிரபலங்களை கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தேர்தல் ஆணையத்திடம் கடந்த டிசம்பர் 27-ந்தேதி மனு கொடுத்தேன். அந்த மனுவை பரிசிலீக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எலிபிதர்மாராவ், ஹரிபரந் தாமன் ஆகி யோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணைய வக்கீல் டி. ராஜகோபால் ஆஜராகி வாதா டினார். அப்போது, மனு தாரரின் கோரிக்கையை தேர்தல் ஆணை யம் பரிசீலித்து வருகிறது என்றார். இதையடுத்து மனு தாரரின் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தர விட்டனர்.
(((((( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: