Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அரசியல் போட்டியால் ஊழல் வழக்கில் சிக்கினேன்: பி.ஜே.தாமஸ்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ், கடந்த செப்டம்பர் 7-ந் தேதி நியமிக்கப் பட்டார். அவர் கேரளாவில் பாமாயில் இறக்கு மதி ஊழல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, அவரை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, பொதுநல வழக்கு மையம் என்ற தொண்டு நிறுவனமும், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் ஜே.எம். லிங்டோ உள்ளிட்டோரும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன்மனு தாக்கல் செய்தனர்.

இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச், மனுவுக்கு பதில் அளிக்குமாறு கடந்த டிசம்பர் 6-ந் தேதி தாமசுக்கு நோட்டீசு அனுப்பியது. அதற்கு பி.ஜே.தாமஸ் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் நான் மிகவும் நேர்மையானவன். எனது அரசுப் பணியில் அப்பழுக்கற்ற நேர்மையை கடைபிடித்து வந்துள்ளேன்.
ஆனால், கேரளாவில் தற்போதைய முதல்- மந்திரி அச்சுதானந் தனுக்கும், முன்னாள் முதல்- மந்திரி கருணாகரனுக்கும் இடையி லான அரசியல் போட்டியால் நான் பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில் துரதிருஷ்டவசமாக சிக்க வைக்கப் பட்டேன் என்று தாமஸ் கூறியுள்ளார்.
(((( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: