Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சா‌ஸ்‌திர‌ம், ஜாதக‌‌‌ம் ‌வி‌த்‌தியாச‌ம் எ‌ன்ன?

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: சாஸ்திரம், ஜாதகம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யா தர‌ன்: சாஸ் திரங்கள் என்பது வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடக்கூடியது. வேத ங்கள் ரிக், யசூர், சாமம், அதர் வனம் என்று 4 இருக் கிறது. 5வது வேதமாகத் திகழக்கூடியது ஜோதிடம். அதனால்தான் சாஸ்திரங்களில் ஜோதிடம் பற்றியும் பேசப்பட்டுள்ளது. ஜோதிடத்திலும் சாஸ்திரங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது.

ஜோதிடத்தில் கிரக அமைப்பு சரியில்லை என்றால், அதற்குப் பரிகாரங்களை சாஸ்திரங்கள் மூலமாகத்தான் சொல்கிறோம். இந்த மந்திரத்தை, இந்த வேதத்தை, அதிகாரத்தைப் படித்தால் இந்த கிரகத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கும் என்று சொல்கிறோம்.

ஒரு கிறித்தவ நண்பர் ஒருவர் வந்திருந்தார். செவ்வாயும், குருவும் பலவீனமாக இருப்பதால் ஒரு சில இந்துக் கோயில்களுக்குச் செல்லுமாறு சொன்னேன். அதற்கு, இல்லை நாங்கள் மதம் மாறிவிட்டோம். அங்கு போக முடியாது என்று சொன்னார்.

குருவினுடைய ஆதிக்கத்தில் அந்தோணியார் வருகிறார். ஆய்வில் நாம் பிரித்து வைத்திருக்கிறோம். புனித அந்தோணியார் கோயிலிற்குப் போய் வாருங்கள். பைபிளில் மார்க் எழுதிய சுவிசேஷத்தை எடுத்துப் படியுங்கள். அவ்வாறு படிக்கும் போது குரு, செவ்வாயுடைய தாக்கங்கள், பாதிப்புகள் எல்லாம் விலகும் என்று சொன்னேன். அவர்கள் அவ்வாறு செய்துவிட்டு, எங்களுக்கு வித்தியாசம் தெரிகிறது என்று சொன்னார்கள்.

இதுபோலதான், சாஸ்திரங்கள் ஒருபக்கம் இருந்தாலும், வேதங்கள், மந்திரங்கள், உபநிடதங்களிலும் – கீதையில் பார்த்தீர்களென்றால், கிரகங்களில் சுக்ரனும் நானே என்று பகவான் சொல்கிறார். சூப்பர்லேட்டிவாக வரும் போது தன்னை சுக்ராச்சாரியாராக பிரகடனப் படுத்துகிறார். சாஸ்திரமும், ஜோதிடமும் பல இடங்களில் இணைந்து போகிறது.

சாஸ்திரப்படி பையனுக்கு காது குத்த வேண்டும் என்றால், ஜோதிடப்படி எந்தெந்த திதிகள், நட்சத்திரங்கள் வரும் நாட்களில் காது குத்தினால் நல்லது, எந்தெந்த நாட்களில் திருமணம் முடித்தால் நல்லது என்று சொல்கிறோம். திருமணம் என்றவுடன் மந்திரங்கள் ஓதுதல் போன்றவையும் வருகிறது.

இப்படி ஒன்றுக்கு ஒன்று பின்னிப் பிணையக்கூடியதுதான். சில நேரங்களில் சாஸ்திரங்கள் ஜோதிடத்தைப் பயன்படுத்துகிறது. பல நேரங்களில் ஜோதிடம் சாஸ்திரங்களைப் பயன்படுத்துகிறது. ஆகவே, இது இரண்டுமே நாணயத்தி‌ன் இரண்டு பக்கங்களைப் போலத்தான் இருக்கிறது.

(((((இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: