தமிழக சட்டசபை தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நிருபர் களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

தமிழகத்தில் 4 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துள்ளனர். இன்னும் 23 லட்சம் பேர் தங்கள் பெயரை இன்னும் சேர்க்காமல் உள்ளனர். தமிழகத்தில் தேர்தல்களில் வாக்குப் பதிவு 70 சதவீதம் அல்லது 75 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது. எஞ்சியுள்ள 30 சதவீதம்பேர் ஓட்டுப் போடுவது இல்லை.
தகுதியுள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, வாக் காளர்களை ஓட்டுப்போடச் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய வாக்காளர் தினம் இன்று (ஜனவரி 25) கொண்டாடப் படுகிறது. ஓட்டுப்போடுவது வாக்காளர்களின் உரிமை மட்டுமல்ல அவர்களின் கடமையும் ஆகும். தங்களை ஆள்பவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு தங்களுக்கு உள்ளது என்பதை வாக்காளர்கள் உணர வேண்டும்.
அனைவரும் மனச்சாட்சியுடன் ஓட்டுப்போட வேண்டும். பணம் உள்ளிட்ட வேறு எந்தவிதமான ஆதாயங்களுக்காகவும் ஓட்டுப் போடக்கூடாது. இதுகுறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கு வதற்காகத்தான் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப் படுகிறது. சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் விழாவில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளர் சையது முனீர் ஹோடா, தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
புதிய வாக்காளர்களுக்கு கவர்னர் அடையாள அட்டை வழங்குகிறார். மேலும், வாக்காளர் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வாக்காளர் தின விழா சென்னை யில் மட்டுமல்லாமல் மாவட்ட தலை நகரங்களிலும், தமிழகத்தில் மொத்தமுள்ள 54 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் கொண்டாடப்படும். சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலில் புதிதாக 11 லட்சம் பேர் தங்கள் பெயர்களை சேர்த்து ள்ளார்கள்.
வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பெயர் சேர்க்கக் கோரி விண்ணப் பிக்கலாம். வாக்காளர் அட்டை பெறுவதற்கு பிப்ரவரி மாதம் வரை விண்ணப்பம் கொடுக்கலாம். சட்டமன்ற தேர்தல் எப்போது நடத்தப் படும் என்பதை தேர்தல் ஆணையம் தான் அறிவிக்க வேண்டும். முந்தைய சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப் பட்டிருக்கிறது.
எனவே, இந்த முறையும் அதே நாளில் தேர்தல் தேதி அறிவிக்கப் படுமா? என்பது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. மேல்சபை தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்க வேண்டும். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட முறை களை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் சோதனை முயற்சியாக புதிய தேர்தல் நடைமுறைகள் கொண்டு வரப்பட்டன. பணப்பட்டுவாடாவை தடுப்பது, வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, வேட்பாளர் களின் அனைத்து செலவினங்களையும் வங்கிக்கணக்கு மூலமாக மேற்கொள்ளச் செய்வது ஆகிய நடவடி க்கைகள் அங்கு நல்ல பலனை கொடுத்தன.
அதுபோன்ற புதிய தேர்தல் நடைமுறைகளை தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் கொண்டுவருவது பற்றிய அறிவிப்பு இன்னும் 15 நாளில் வெளியிடப்படும். தேர்தல் விதி முறை மீறல்களை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூற முடியாது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் விதிமுறை மீறல் தொடர்பாக 6 ஆயிரம் எப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்பட்டது.
தேர்தலின்போது பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கண் காணிப்பு கேமராக்கள் வைக்கப்படுவது வழக்கம். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கேமராக்கள் வைப்பது என்பது இயலாத காரியம். முடிந்த வரைக்கும் அதிகப்படியான வாக்குச் சாவடி களில் கேமராக்கள் வைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுப்போம். தாங்கள் எந்த கட்சிக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை உறுதிபடுத்தும் வகையில் ஒப்புதல் சீட்டு வழங்குவது என்பது கடினம்தான்.
இருந்தாலும், இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குனர் இந்திரேசன் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் பரிந்து ரையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் படும். இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.
பேட்டியின்போது கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பி.அமுதா உடனிருந்தார்.
(((((( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))))