Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தியாவுடன் புதிய நட்புறவை ஏற்படுத்தியுள்ளோம்: ஒபாமா

தனது தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் இந்தியாவுடன் புதிய நட்புறவை உருவாக்கி யுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெ ரிக்க நாடாளுமன்ற த்தில் இன்று நடைபெற்ற ஆண்டு சிறப்புக் கூட்டத்தில் பேசு கையில் இவ்வாறு தெரிவி த்தார். ஒபாமா பேசியதாவது: உலகில் அமைதியும் வளமும் ஏற்படும் வகையில் இந்தியா போன்ற நாடுகளுடன் புதிய நட்புற வை உருவாக்கி யுள்ளோம். ரஷ்யாவுடன் நமது உறவை புதுப்பித்துள்ளோம். தீவிரவாத எதிர்ப்பு, ஏவுகணை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் நமது கூட்டுறவை மேம்படுத்தி யுள்ளோம். வரும் மார்ச் மாதம், பிரேசில், சிலி, எல் சால்வடார் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற் கொள்கிறேன். விவசாயி களுக்கு உதவுதல், ஊழலை ஒழித்தல், சமூகத்தை சீர்படுத்தி மக்களுக்கு வாய்ப்புகளை வழங்குதல் ஆகிய வற்றில் யார் பொறுப்பை ஏற்று செயல் படுகிறார்களோ, அந்த நாடுகளுக்கு நாம் துணை நிற்கிறோம். அனைத்து கண்ட ங்களிலும் அணுஆயுதத் தளவாடங்கள் முடக்கப்பட வேண்டும். அவை தீவிரவாதிகளின் கைகளுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறோம். கொரிய நாடுகளின் பிரச்னையில், நாம் தென் கொரியாவுக்கு பக்கபலமாக உள்ளோம். அணுஆயுதங்களை தடை செய்வதில் வட கொரியா தீ்ர்மானமாக செயல்பட வேண்டும் என்று வலி யுறுத்துகிறோம். உலகில் அமைதியை நிலைநாட்ட நாம் எடுத்து வரும் நடவடிக் கையில் இது ஒரு பங்கு மட்டுமே.இவ்வாறு ஒபாமா தனது உரையில் தெரிவித்தார்.

(((((( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: