Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி

உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் கவலையளிக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்தவும், உணவு பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி, அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை யின் விவரம் வருமாறு: அதிகரி த்து வரும் பணவீக்கமும், உணவுப் பொருட்களின் விலை உயர்வும் மிகுந்த கவலையளிக்கிறது. இதை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை. அடுத்த 20 ஆண்டுகளில் நம்நாட்டின் மக்கள் தொகை 148 கோடியாக இருக்கும். அனைவருக்கும் உணவு பாதுகாப்பு குறித்த நடவடிக்கை தேவை. கிராமப்புற வளர்ச்சி, விவசாய உற்பத்தி, உணவு பாதுகாப்பு ஆகிய வற்றுக்கு புதுமையான வழியில் அணுகுமுறை தேவை. இதற்கு இரண்டாவது பசுமைப் புரட்சி தேவை. முதல் பசுமை புரட்சி, பாசன வசதி பகுதிக்குட் பட்டதாக அமைந்து விட்டது. இரண்டாவது பசுமை புரட்சி, மழை பெய்யும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதற்கு ஏற்ற தொழில்நுட்பத்தையும், வழி முறை களையும் ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் உருவாக்க வேண்டும்.

சிறந்த நிர்வாகத்துக்கும், வளர்ச்சிக்கும் எதிரியாக இருப்பது ஊழல் தான். திட்டமிட்ட அணுகுமுறையின் மூலம் இதை ஒழிக்க வேண்டும்.பார்லிமென்ட் சிறப்பாக செயல்பட அரசு மற்றும் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. பார்லிமென்ட் என்பது நம்நாட்டின் கவுரவ களஞ்சியம். இதை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் எதிர்க்கட்சிகளுக்கும், அரசுக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது. பார்லி மென்டின் நன்னடத்தை கவுரவம் ஆகியவை பேணி பாதுகாக்கப்பட வேண்டும். பார்லிமென்ட் என்பது பிரச்னைகளை ஆக்கபூர்வமாக விவாதிக்கும் மற்றும் தீர்க்கும் இடம் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருக்க வேண்டும். வறுமை ஒழிப்பு, நாட்டின் வளர்ச்சி ஆகியவை தான் நமது குறிக்கோள். தேவையற்ற குழப்பங்கள், பதட்டத்தை அதிகரிக் காமல், சமுதாய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நல்ல நிர்வாகமும், மக்களாட்சியும் தான் தேவை. அலட்சிய மனப் பான்மையும், உணர்ச்சியற்ற போக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்து உலக அளவில் குரல் கொடுக்க இது சரியான வாய்ப்பு. பாதுகாப்பும், ஸ்திரதன்மையும் இருந்தால் தான் வளர்ச்சி மற்றும் மேம்பாடு இருக்கும். இதற்கு அண்டை நாடுகளுடன் பேச்சு வார்த் தையும், ஒத்துழைப்பும் அவசியம். உள்நாட்டை பொறுத்த வரை போலீசாரின் பங்கு அவசியமாகிறது.கொலை, கற்பழிப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் சமூக கட்டமை ப்பை பாதிக்  கின்றன. வன்முறைக்கு ஒருபோதும் இடம் தராதீர்கள், என மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

கல்லூரிகளில் நடக்கும் ராகிங்கும் ஒரு வன்முறை தான். மிகக் கொடிய இந்த போக்கை ஒருகாலும் பொறுத்துக்கொள்ள முடி யாது. ராகிங் போன்ற நிகழ்வுகள் பெற்றோருக்கும், நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துகின்றன. ஜனநாயக த்தை பேணிக் காக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. மற்ற நாடுகளை போல இந்தியாவுக்கும் நிறைய பிரச்னைகள் உள்ளன. அவற்றை எதிர் கொள்ளத் தான் வேண்டும். இந்த பிரச்னைகளை நாம் ஒன்று பட்டுதான் தீர்க்க வேண்டும். இவ்வாறு பிரதிபா பாட்டீல் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

( ( ( ( ( ( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ) ) ) ) ) )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: