Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலக கோப்பை போட்டி: 13 மைதானங்களும் தயார்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்கு கிறது.   இந்தியா, இலங்கை, வங்காள தேசம், ஆகிய 3 நாடு களில் உள்ள 13 மை தான ங்களில் போட்டி கள் நடக்கி ன்றன. இதை யொட்டி போட்டி நடக்கும் மைதா னங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு தயாராகி வருகின்றன.
போட்டி தொடங்க இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில் பல மைதானங்கள் இன்னும் தயாராகவில்லை என்று கூறப்பட்டது. இதை யடுத்து சர்வதேச கிரிக்கெட் சங்க அதிகாரிகள் குழு பல்வேறு மைதான ங்களிலும் ஆய்வு நடத்தியது. மும்பையில் உள்ள வாங்கடே மைதானம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
இதையடுத்து போட்டிக் குழு டைரக்டர் ரத்னாகர் ஷெட்டி கூறிய தாவது:-
நாங்கள் நடத்திய ஆய்வில் போட்டி நடக்கும் அனைத்து மைதான ங்களுமே தயாராகி விட்டன. இன்னும் சிறு, சிறு வேலைகள் பாக்கி இருக்கின்றன. உலக கோப்பை போட்டி தொடங்கும் முன்பு அனைத்து மைதான ங்களும் முழு அளவில் தயாராகிவிடும். எல்லா மைதான ங்களுமே மிகச் சிறப்பாக தயார் படுத்தப் பட்டுள்ளன.இதில் கவலைப் பட வேண்டிய எந்த விஷயமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: