Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கறுப்பு பண விவரங்களை வெளியிட முடியாது: பிரணாப் முகர்ஜி

சுவிட்சர்லாந்து உட்பட வெளிநாட்டு வங்கிகளின் ரகசிய கணக்குகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்புப் பண விவரங்களை வெளியிட முடியாது. இதற்கென சட்ட நடை முறைகள் இல்லாததே காரணம்,” என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்ட மாக தெரிவித்தார்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர, மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என, சுப்ரீம் கோர்ட் விமர்சனம் செய்தது.

*வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை பற்றிய விவரத்தை வெளியிட்டால், எங்கே அரசு கவிழந்துவிடுமோ என்று அஞ்சிதான் மத்திய அரசு வாய் திறக்காமல் உள்ளது என எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகி ன்றன. இந்தியர்கள் போட்டுவைத்துள்ள கறுப்புப் பணம் குறித்த விவரத்தை, விக்கிலீக்ஸ், “லீக்’ பண்ணு வதற்குள் வெளியிடும் என்ற அச்சமும் எழுந்தது.இது தொடர்பாக பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “வெளிநாட்டில் டிபாசிட் செய்யப் பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வரும் விவகாரத்தில் உடனடி தீர்வு கிடைக்காது’ என்றார்.

*இந்நிலையில், மத்திய அரசு நிலை என்ன என்பதை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி டில்லியில் நேற்று நிருபர்களை சந்தித்து விளக்கினார்.

அவர் கூறியதாவது: சுவிட்சர்லாந்து உட்பட வெளிநாட்டு வங்கி களில் இந்தியர்களின் கறுப்புப் பணம் எவ்வளவு உள்ளது என்பது பற்றியோ, எவ்வளவு பதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமோ துல்லியமாக தெரியவில்லை. இருப்பினும் தோராய மாக இருபது லட்சம் கோடி ரூபாய் இருக்கலாம் என, சர்வதேச நிதி அமைப்பு மதிப்பீட்டின்படி அனுமானம் செய்யப் படுகிறது. வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஐந்து அம்ச திட்டத்தை அரசு வகுத்துள்ளது. இதை செயல்படுத்துவது தொடர்பாக 65 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

கறுப்பு பணத்தை மீட்பது தொடர்பாக, பல்நோக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்றை நியமித்துள்ளோம். இந்த விஷயத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை, இவ்விஷய த்தில், பிரச்னையை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரையில், கறுப்புப் பணம் தொடர் பாக நாம் திரட்டியிருக்கும் தகவல்களை, வெளியிடுவதற்கு சர்வ தேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட சட்ட நடைமுறை இல்லை. தகவல் களை வெளியிட மாட்டோம் என்று உறுதிமொழி கொடுத்து விட்டு விவரங்கள் சிலவற்றை வாங்கியுள்ளோம். இதை மதிக்காமல், வெளியிட்டால், மற்ற நாடுகளிலிருந்து எப்படி தகவல் களை பெற முடியும். இந்த அடிப்படையில்தான், தற்போது அரசு பெற்றிருக்கும் தகவல்களை வெளியிட முடியவில்லை. இதுதான் உண்மையான காரணமே தவிர மத்தியில் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயம், அரசுக்கு இல்லை.

இப்போதைய நிலையில், 18 கணக்குகள் தொடர்பான விவரங்களை அரசு பெற்றுள்ளது. இது பற்றிய ரகசியத்தை வெளியிட மாட்டோம் என்று சொல்லித்தான் அதை பெற்று ள்ளோம். இதை வெளியிட்டால், தகவலைத் தெரிவிக்க முன் வந்திருக்கும் மற்ற நாடுகள் இந்த விஷயத்தில் பின்வாங்க வாய்ப்பு உள்ளது.சுவிட்சர்லாந்து நாடு இது வரை தனது வங்கிகளில் உள்ள கறுப்புப் பண முதலீடு குறித்து எந்தவொரு நாட்டிடமும் தகவல்களை வெளியிடவில்லை. மாறாக அங்குள்ள யு.பி.எஸ்., வங்கி, அமெரிக்காவிடம் தகவல் தந்திருக் கிறது.

இதுவரையில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்:

* இந்தியர்கள் வெளிநாடுகளில் செய்துள்ள கறுப்புப் பண முதலீ டுகள் தொடர்பான விவரங்களை, “இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்’ அடிப்படையிலும், ” வரி விதிப்பு தொடர் பான தகவல் பரிமாற்ற ஒப்பந்தம்’ அடிப்படையில் பெற்று ள்ளோம்.

* இந்த இரு ஒப்பந்தங்கள் அடிப்படையில் 23 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இதில் பகாமாஸ், பெர்முடா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் அடங்கும். தகவல்களை பெறுவதற்கு கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை.

* இந்த விவரங்கள் அடிப்படையில், வருமான வரித்துறை வரியை வசூல் செய்வதற்காக வழக்கு தொடரும்போது, இந்த பட்டியலில் யார் யார் உள்ளனர் என்பதை நாட்டுமக்கள் அறிந்து கொள்ள முடியும். வருமான வரித்துறையின் நடவடிக் கைகளை நானோ, மத்திய அரசோ கட்டுப்படுத்த முடியாது.

* வருமான வரித்துறை அதிகாரிகள் சட்டப்பூர்வமாக மேற் கொள்ளும் நடவடிக்கைகளில் நிதியமைச்சராகிய நான் தலையிட முடியாது. வருமான வரித்துறையின் செயல்பாடு, நிதியமைச் சகத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.

*கடந்த 18 மாதங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளின் மூலம், கணக்கில் காட்டப்படாத பணம் 15 ஆயிரம் கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இதே கால கட்டத்தில், சர்வ தேச வரிவிதிப்பு இயக்குனரகம் 34 ஆயிரத்து 601 கோடி ரூபாய்க்கான வரியை வசூல் செய்துள்ளது.

* நம்நாட்டிற்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் எவ்வளவு என்பது அதிகாரப் பூர்வமாக மதிப்பீடு செய்யப்படவில்லை.

* இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப் பட்ட பணத்தின் மதிப்பு என்று, உலக நிதி அமைப்பு 462 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் டாலர் என்பது 4,500 கோடி ரூபாய்) என மதிப்பிடுகிறது. பாரதிய ஜனதா கட்சியோ 1,400 பில்லியன் டாலர்கள் என்கிறது. இப்படி மாறுபட்ட மதிப்பீடுகள். இதில் எதை கணக்கில் எடுத்துக்கொள்வது. எப்போதெல்லாம் வரிச் சோதனை என்று வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கிறதோ அப்போது கறுப்புப் பணம் சம்பந்தம் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

பங்கேற்பு பத்திரத்தின்மூலம் முதலீடு செய்து வரிவிதிப்பில் தப்பிக் கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே பங்கேற்பு பத்திரத்திற்கு (பார்ட்டிசிபேர்ட் நோட்ஸ்) தடை விதிக்கப் படுமா, கறுப்புப் பணம் பற்றி தகவல்களை தாமாக முன்வந்து தெரிவிப்பவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படுமா என நிருபர்கள் கேட்டதற்கு, பிரணாப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தெளிவில்லை பா.ஜ., காட்டம் : புதுடில்லி: “கறுப்புப் பண விவரம் பற்றி தகவல்களை வெளியிட முடியாது என பிரணாப் கூறியிருப்பது அரசின் தெளிவற்ற நிலையை காட்டுகிறது’ என, பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுமா என்பது பற்றி அரசு உறுதிப்பட தெரிவிக்கவில்லை. பொறுப்பை தட்டிக்கழிக்கும் வகையில் பிரணாப் முகர்ஜியின் பேட்டி அமைந்துள்ளது. பல்வேறு நிர்பந்தங்களுக்கு ஆட்பட் டுள்ள மத்திய அரசு, முற்றிலும் செயல் இழந்துள்ளது. கறுப்புப் பணம் தொடர்பாக மத்திய அரசு பெற்றுள்ள 60 கணக்கு விவரத்தில், சுப்ரீம் கோர்ட்டிடம் 24 கணக்குகள் பற்றிய விவரங்கள்தான் தரப்பட் டுள்ளது. இதில், ஏன் அரசுக்கு தயக்கம் என்று தெரியவி ல்லை.இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

பல கோடி வரி ஏய்ப்பு: ஹசன் அலியிடம் விசாரணை :பிரணாப் தகவல்: டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: புனே வைச் சேர்ந்த பண்ணை உரிமையாளர் ஹசன் அலி மீது, இரண்டு பாஸ் போர்ட்களை வைத்து மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சுவிஸ் வங்கியிலும் ஹசன் அலி மூன்று விதமான கணக்குகளை துவங்கியிருப்பது தெரிந்துள்ளது. ஆனால், அதில் கணக்கு வழக்குகள் சரிவர நிர்வகிக்கப் படவில்லை. ஒரு வங்கிக் கணக்கில் 30 லட்சம் டிபாசிட் செய்யப்பட்டிருந்தது. அடுத்த நாளே அந்த பணம் எடுக்கப்பட்டிருந்தது. அது பற்றிய எந்த ஒரு ஆதாரங்களும் சிக்க வில்லை.அதே நேரத்தில், மோசடி ஆவணங்கள் தொடர் பாக சுவிஸ் வங்கியிலிருந்து எந்தவிதமான தகவல்களும் பெற முடியாது. இது தொடர்பாக, 2007ல், மத்திய அரசு சுவிஸ் அரசுடன் பேசியது. புனேவில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அவர் 72 ஆயிரம் கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

இந்த சோதனையின் போதுதான் ஹசன் அலிக்கு வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு இருப்பதும், அதில், 35 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற பல்வேறு தரப்பில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அவர், 72 ஆயிரம் கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தி ருப்பது தெரிந்தது. அவரிடமிருந்து 90 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் அவரது மூன்று சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

( ( ( ( ( ( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ) ) ) ) ) )

Leave a Reply

%d bloggers like this: