Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போக்குவரத்து நெரிசலை குறைக்க மூலக்கடை சந்திப்பில் புதிய மேம்பாலம்: இன்று மாலை அடிக்கல் நாட்டு விழா

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய இடங்களில் மேம் பாலங்கள் கட்டி திறக்கப் பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கட்டும் பணி நடந்து வருகிறது. சென்னை துறைமுக த்திற்கு மும்பை, கொல் கத்தா போன்ற நகரத்தில் இருந்து தின மும் நூற்றுக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன.
இந்த லாரிகள் அனைத்தும் சென்னை நகருக்குள் மூலக்கடை வழி யாகத்தான் நுழைகின்றன. மேலும் தனியார் தொழிற் சாலைகள், நிறுவன ங்களுக்கும் வெளி மாநில லாரிகள் வருகின்றன. இதனால் மூலக் கடை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாத வரம், கொடுங்கையூர், மணலி பகுதிகளுக்கு செல்லக் கூடியவாகன ங்கள் மூலக்கடை சந்திப்பு வழியாகத்தான் போக வேண்டும்.
இதனால் மாநகர பஸ்கள் நீண்ட நேரம் நெரிசலில் சிக்கி கொள்கின்றன. இரு சக்கர வாகனங்களும், கார், ஆட்டோ போன்றவைகளும் நெரி சலில் சிக்கி கொள்கின்றன. பொது மக்கள் இந்த சாலையை கடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் போக்கு வரத்தை சீர்செய்ய அங்கு நின்ற போதிலும் அவர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை.
அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு என்.டி. சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்பதால் மூலக்கடை சந்திப்பை கடப்பதற்குள் பெரும்பாடு பட வேண்டியுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மூலக்கடை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்தது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.49.55 கோடி செலவில் மேம்பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரித்து அடிக்கல் நாட்டு விழா இன்று நடை பெறுகிறது. மூலக்கடை பெரிய வடக்கத்திய சாலையில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் விழாவுக்கு அமைச்சர் வெள்ளக்கோவில் சாமி நாதன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் க.அன்பழகன் அடிக்கல் நாட்டி பேசுகிறார்.
அமைச்சர் கே.பி.பி.சாமி, மேயர் மா.சுப்பிரமணியன், புரசை வி.எஸ். பாபு எம்.எல்.ஏ., திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். நெடுஞ்சாலைத்துறை செய லாளர் கோ.சந்தானம், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
மாதவரம் நகராட்சி தலைவர் டி.சண்முகம், துணைத் தலைவர் சுதர்சனம், மண்டல தலைவர் டன்லப் ரவி, கவுன்சிலர் ஆர்.டி.சேகர், சுஜாதா அந்தோணி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். முடி வில் கண் காணிப்பு பொறியாளர் கே.துரைராஜ் நன்றி கூறுகிறார். மேம் பாலம் கட்டுமான பணி குறித்து தலைமை பொறியாளர் சேகர் கூறிய தாவது:-
மூலக்கடை மேம்பாலம் மொத்தம் 614 மீட்டர் கொண்டதாகும். ஜி.என்.டி. சாலை சந்திப்பில் இருந்து இருபுறமும் 300 மீட்டர் வீதம் கட்டப்படுகிறது. மேம்பாலம் 4 வழிப்பாதையாக அமைகிறது. 17.2 மீட்டர் அகலம் கொண்டது இந்த மேம்பாலம். பாலத்தின் கீழ் பகுதியில் பொதுமக்கள் சாலையை கடந்து மாதவரம், மணலி, கொடுங்கையூர் பகுதிகளுக்கு செல்ல சுரங்க நடைபாதை அமைக்கப்படுகிறது. 18 மாதத்தில் மேம்பாலம் கட்டும் பணி நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.
(((((( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: