மாவட்ட உதவி கலெக்டர் யஷ்வந்த் சோனாவான் கொல்ல ப்பட்ட சம்பவத்தையடுத்து, மாநில அரசு ஊழியர்கள் 15 லட்சம் பேர், தங்களுக்கு உரிய பாது காப்பு மற்றும் கொலை யாளிகளை உடனே கண்டு பிடித்து அவர் களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி அவர்கள் ஸ்டிரை க்கில் ஈடுபட்டு ள்ளதால் மாநிலம் முழு வதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மகாரா ஷ்டிரா மாநிலம் மன்மத்தில் மாவட்ட உதவி கலெக்டர் யஷ்வந்த் சேனா வானை, எரிபொருள் கடத்தல் கும்பல் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம், மகாராஷ்டிராவை மட்டுமல்லாது, நாட் டையே கவலைக்குள்ளாக்கியுள்ளது. மகாராஷ்டிரா, மாலேகான் மாவட்ட உதவி கலெக்டராக பணியாற்றியவர் யஷ்வந்த் சோனாவான். இந்த பகுதியில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை பதுக்குவது, கடத்துவது, கலப்படம் செய்வது போன்ற சட்ட விரோத செயல்களில் பலர் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு எதிராக யஷ்வந்த் கடும் நடவடிக்கை எடுத்து வந்தார். இந்நிலையில், சோனேவான், நந்தோகானில் நடக்க விருந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ள இடத்திருக்கு அருகில் சில லாரிகள் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தை அவர் கண்டார். இதையடுத்து, அவர் காரை விட்டு இறங்கி, அருகில் நின்று கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது போபட் ஷிண்டே என்பவன் அங்கு வந்தான். இவன், பெட்ரோல், டீசல் கடத்தல் தொழில் செய்து வருபவன். இவனுடன் வன்முறை கும்பல் ஒன்றும் அங்கு வந்தது. விசாரணை நடத்திக் கொண்டிருந்த யஷ்வந்தை தாக்கிய அந்த கும்பல், திடீரென அவர் மீது பெட்ரோலை ஊற்றி, தீ வைத்தது. இதன் பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரி ஒருவர் வன்முறை கும்பலால், பொது இடத்தில் உயிருடன் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம், மகாராஷ்டிரா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 பேர் கைது : உதவி கலெக்டர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். விரைவில், இதற்கு காரணமான அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து வோம் என்றும், கடத்தலுக்கு எதிரான சோதனையும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
போராட்டம் : உதவி கலெக்டர் எரித்துக் கொலை செய்யப் பட்டதைக் கண்டித்து, கொலையாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாநிலம் முழுவதும் 15 லட்சம் அரசு ஊழியர்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். அரசு ஊழியர் களுக்கு தகுந்த பாதுகாப்பில்லை, குற்றங்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளை குற்றவாளிகள் கொலை செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு இருக்கிறது. இந்த அசாதாரண சூழ்நிலையை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டு மென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக, ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் அரசுப்பணிகள் முடங்கியுள்ளன.
(((((( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))))