Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எக்ஸெல் – சில ஷார்ட்கட் வழிகள்

MS Excel

Ctrl-1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல் களின் வடிவமைப்பை மாற்ற லாம்
F2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும்.
Ctrl-Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம்.
Ctrl-Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம்.
Ctrl-Shift-”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.
Ctrl-’: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள பார்முலாவைக் காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.
Ctrl-R: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து வலது பக்கம் உள்ள செல்களிள் தேர்ந்தெடு க்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும்.
Ctrl-D: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து கீழே உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும்.
Ctrl-‘: செல்லின் மதிப்பு மற்றும் அதன் பார்முலாக் களை மாற்றி மாற்றி காட்ட இந்த சுருக்கு வழியைப் பயன்படுத்தலாம்.
Ctrl-$: கரன்சி மதிப்பை இரண்டு தசம ஸ்தானங்களுக்கு தரும் வகையில் பார்மட் செய்திட இந்த சுருக்கு வழி பயன்படுகிறது.
கிழமைகளின் பெயர்கள்:
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், செல் ஒன்றில் கிழமைகளின் பெயரை டைப் செய்தால், அந்த பெயரின் முதல் எழுத்து தானாகப் பெரிய எழுத்தாக அமைக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, monday என டைப் செய்தால், அது Monday என மாற்றப்படும். இந்த மாற்றம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. ஏதோ காரணத்தினால், நீங்கள் டைப் செய்தபடியே ‘monday’ அமைய வேண்டும் என விரும்பு கிறீர்கள். இதற்கான செட்டிங்ஸ் ஒன்றை எக்ஸெல் தொகுப்பில் அமைத்தால் போதும். ஒர்க்ஷீட்டைத் திறந்து கொள்ளுங்கள். இதில் Tools மெனு சென்று கிடைக்கும் மெனுவில், AutoCorrect என்பதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். இப்போது எக்ஸெல் ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸினைக் காட்டும். இதில் AutoCorrect என்ற டேப் தேர்ந்தெடுக்கப் படுவதனை உறுதி செய்திடவும். Capitalize Names of Days என்றுள்ள பாக்ஸில் செக் அடையாளத்தை எடுத்துவிட்டால், நீங்கள் விரும்பியபடி முதல் எழுத்து மாற்றப்பட மாட்டாது. பின்னர், ஓகே அழுத்தி வெளியேறவும்.
ஆப்ஜெக்ட் கேன்சல்:
எக்ஸெல் தொகுப்பில் சார்ட் ஒன்றைத் தயாரிக்கையில், அதில் இணைக்கவேண்டியவற்றைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். தேர்ந் தெடுத்த பின், அவை அனைத்தும் சரியாக நீங்கள் எண்ணிய படி அமையும் வரை, அவற்றின் தன்மைகளை (properties) மாற்றி அமைக்கிறீர்கள். இதில் ஏதாவது ஒன்றை இதிலிருந்து நீக்க வேண்டும் எனில், அதற்கென ஒரு விரைவான வழி உள்ளது.
சார்ட்டில் சேர்க்க வேண்டியவற்றை, கிளிக் செய்து தேர்ந்தெடுக் கிறீர்கள். தவறுதலாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து விட்டால், இதனை நீக்க இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கலாம். முதலில் தேர்ந் தெடுக்கப்பட்டது நீக்கப்பட்டுவிடும். இன்னொரு ஆப்ஜெக்ட் ஒன்றைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்ற சூழ்நிலையில், எப்படி ஏற்கனவே தேர்ந்தெடுத்ததனை நீக்குவது. மிக எளிய வழி எஸ்கேப் கீயினை அழுத்துவதுதான். எக்ஸெல் உடனே உங்கள் தேர்வை ரத்து செய்கிறது.
எக்ஸெல் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்
Ctrl+A – அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்க
Ctrl+B – போல்ட் பார்மட்டிங் செய்திடவும், அதனை நீக்கவும்
Ctrl+C –– தேர்ந்தெடுத்த சொல்லை காப்பி செய்திட
Ctrl+D -– தேர்ந்தெடுத்த செல்லில் நிரப்ப
Ctrl+F –– தேடுதலுக்கான ஆப்ஷனைக் காட்ட
Ctrl+G -– Go to டயலாக் பாக்ஸ் செல்ல
Ctrl+H –– Find and Replace டயலாக் பாக்ஸ் செல்ல
Ctrl+I –– சாய்வெழுத்து பார்மட்டிங் செய்திடவும் அதனை நீக்கவும்
Ctrl+K –– Hyperlink டயலாக் பாக்ஸ் இணைக்க
Ctrl+L ––– Create list டயலாக் பாக்ஸ் கொண்டு வர
Ctrl+N ––– புதிய பைல் ஒன்றை கொண்டு வர
Ctrl+O ––– புதிய பைல் ஒன்றைத் திறக்க
Ctrl+P –– பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்க
Ctrl+S –– அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் பைலை சேவ் செய்திட
Ctrl+U –– அடிக்கோடினை இடவும் நீக்கவும்
Ctrl+V –– கிளிப் போர்டில் உள்ளதை ஒட்ட
Ctrl+X –– தேர்ந்தெடுத்த சொல்லை கட் செய்து கிளிப் போர்டுக்கு கொண்டு செல்ல
Ctrl+Y –– முந்தைய செயல்பாட்டினை செயல்படுத்த
Ctrl+Z –– மேற்கொண்ட செயல்பாட்டினை நீக்க

(((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: