Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு: அவல் லட்டு

தேவையான பொருட்கள்:
அவல் – 200கி
சர்க்கரை – 200 கி
ரோஸ் வாட்டர் தேவையான அளவு
நிலக்கடலைப் பருப்பு 50 கிராம்
செய்முறை:
அவலில் கலந்துள்ள கற்களை நீக்கவும். நன்கு காய்ந்ததாக இருக்க வேண்டும்.வாணலியை அடுப்பில் வைத்து நிலக் கடலைப் பருப்பை லோசாக வறுத்து கொள்ள வேண்டும்.
சர்க்கரையை பாகு (ஒட்டும் பதம்) காய்ச்சி அதில் முதலில் அவலைச் சேர்க்கவும். பின் நன்கு கிளறி பிறகு நிலக்கடலைப் பருப்பை போட்டு மீண்டும் கிளற வேண்டும். அதன்பிறகு ரோஸ் வாட்டர் தேவையான அளவு சேர்த்துக் கிளறவும். அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறுவதற்கு முன்னதாக லட்டுகளாக உருட்டிக் உருண்டை பிடிக்க வேண்டும்.
(((((((   படித்ததை ருசித்து படைத்தோம்   ))))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: