Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மத்திய அரசு இணையத்தில், சீனாவில் அருணாசல பிரதேசம்

அருணாசல பிரதேசம் எங்களது பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் மத்திய அரசின் இணைய தளம் ஒன்றிலேயே அருணா சலப்பிரதேசம் சீனா பகுதியில் இருப்பது போல் வரை படம் வெளியிடப்பட்டு உள்ளது.
அருணாசல பிரதேசத்தில் தனியார் நிறுவன உதவியுடன் அணை ஒன்று கட்டப்பட்டு அதன் மூலம் 2700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்படப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தயாரித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளனர். அதில் ஒரு வரை படம் இணைக்கப்பட்டுள்ளது.
“கூகுள் மேப்”பை பயன்படுத்தி இந்த வரை படத்தை உருவாக்கி உள்ளனர். அருணாசல பிரதேசம் சீனா பகுதிக்குள் இருப்பது போல அந்த வரைபடம் உள்ளது. இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்காக மக்கள் கருத்தை அறிய சுற்றுச் சூழல் துறை திட்டத்தில் விவரங்களை இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது. இந்த வரை படமும் இணைக்கப்பட்டு உள்ளது.
இதை பார்த்த அருணாச்சல பிரதேச சமூக அமைப்பு ஒன்று போலீசில் புகார் கொடுத்தது. ஆனாலும் வரை படத்தை இன்னும் நீக்காமல் வைத்துள்ளனர். தவறான ஒரு வரைபடத்தை கூட கவனிக்காமல் மத்திய அரசே தனது இணைய தளத்தில் வெளியிட்டு இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
(((((( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: