Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

5 வகை சிவராத்திரி விரதம்!

மாசி மாதத் தேய்ப்பிறைச் சதுர்த்தசி அன்று வருவது மகா சிவ ராத்திரியாகும். சூரிய உதயம் முதல் இரவு முழுவதும் பகல் இரவு 60 நாழிகையும் அமா வாசை இருந்தால், அன்று யோக சிவ ராத்திரி. திங்கட்கிழமை அன்று சூரிய அஸ்தமனம் முதல், அன்றிரவு நான்கு ஜாமமும் தோப்பிறைச் சதுர்த்தி இருந்தால் அன்றைய தினமும் யோக சிவராத்திரி.
திங்கட்கிழமை அன்று இரவு நான்காம் ஜாமத்தில், அமாவாசை அரை நாழிகை இருந்தாலும் யோக சிவராத்திரியாகும். திங்கட் கிழமை இரவு நான்காம் ஜாமத்தில், தேய்பிறைச் சதுர்த்தசி அரை நாழிகை இருந்தாலும் யோக சிவராத்திரியாகிறது. இப்படி யோக சிவராத்திரி திங்கட் கிழமை சம்பந்தமாய் வருவது நான்கு வகைப்படும்.
யோக சிவராத்திரி விரதம்:
ஒரு யோக சிவராத்திரி விரதம் இருந்தால், அது மூன்று கோடி மற்றைய சிவராத்திரி விரதம் இருந்த பலனைத் தரும் என்பது ஜதீகம்.
நித்திய சிவராத்திரி:
பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி 12, வளர்பிறைச் சதுர்த்தசி 12 இந்த இருபத்து நான்கும் நித்திய சிவ ராத்திரியாகும்.
பட்ச சிவராத்திரி:
தை மாதம் தேய்பிறைப் பிரதமை தொடங்கிப் பதின்மூன்று நாள் வரையில், நியமத்துடன் ஒரு பொழுது உணவு உண்டு. பதினான்காவது நாளான சதுர்த்தசியன்று விதிப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி ஆகும்.
மார்கழி மாத வளர்பிளைச் சதுர்த்தசி திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடி வந்தாலும் மாசிமாதத் தேப்பிறைச் சதுர்த்தசி செவ்வாய்க் கிழமையுடனோ அல்லது ஞாயிற்றுக்கிழமையுடனோ கூடி வந்தாலும் அந்த ஒரு சிவராத்திரி, மூன்று கோடி சிவராத்திரிகளுக்கு இணையான தாகும் என்று அறியப்படுகிறது.
சிவராத்திரி வரும் நேரத்தைப் பொருத்து இன்னும் பலவகை சிவராத்திரிகள் உள்ளன. சிவராத்திரியில் பூஜை செய்தால் கிடைக்கும் பலன்களுக்குச் சான்றாக பழங்காலக் கதை ஒன்றும் கூறப்படுகிறது. ஒருமுறை சுந்தரசேனகள் என்ற மன்னன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.
வெகுநேரமாகியும் வேட்டையாட விலங்குகள் கிடைக்காததால் அன்றைய தினம் இரயில் காட்டிலேயே தங்குவதற்கு முடிவு செய்தான். ஒரு மரத்தின்ள மேல் ஏறுவதற்கு முன் அந்த இடத்தை சுத்தம் செய்வதற்காக தண்ணீர் எடுத்து வந்து ஊற்றினான். மரத்தின் மீது ஏறி தூங்கினான்.
அந்த மரம் வில்வ மரம் என்றோ, தான் ஊற்றிய தண்ணீரை உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகமாக அமைந்தது என்றோ சுந்தரசேனக னுக்குத் தெரியாது. நள்ளிரவில் காட்டு மிருகங்களின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த மன்னன். வில்வ மரத்தை சற்றே கெட்டியாகப் பிடித்து குலுக்கியதால் அந்த மரம் ஆடியது.
ஆதிலிருந்து வில்வ இலைகள் கீழே உள்ள லிங்கத்தின் மீது அர்ச்சனை போல விழுந்தன. அன்றைய தினம் மகா சிவராத்திரியாக அமைந்தது. மன்னன் தான் அறியாமலேயே சிவபூஜை செய்து உள்ளான். பின்னர் அடுத்த நான் நாடு திரும்பிய சுந்தர சேனகன், சிறிது காலத்தில் உயிரிழந்தான். மன்னனை எமதர்மன் நரகத்திற்கு கொண்டு சென்றான்.
ஆனால் சிவபெருமானின் ஆட்கள் சுந்தர சேனகனை எம தர்மனிடம் இருந்து மீட்டு சொர்க்கலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிவபெருமான் மன்னனை தன்னுடன் வைத்துக்கொண்டாராம்.

மகாசிவராத்திரி என்று தெரியாமல் பூஜை செய்த மன்னனுக்கே இந்த அளவு சிவபெருமானின் அனுக்கிரகம் கிடைத்தது என்றால், முறை யாக விரதம் இருந்து மகா சிவராத்திரி நாளில் பூஜை செய்வோர் எந்த அளவுக்கு பேறு பெறுவர் என்பதை கூறத் தேவையில்லை.

(((((இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: