Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஆப்பிள் ஐபாட்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட், இன்று முதல் இந்தியச் சந்தை யில் விற்பனைக்கு வந்துள்ளது. இது குறித்து, ஆப்பிள் நிறுவனம், தனது வெப்சைட்டில் தெரிவித் துள்ளதாவது : இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் தற் போது தங்கள் நிறுவன தயாரி ப்புகள் பயன்பாட்டில் இருந் தாலும், தங்கள் நிறுவனம், அதிகாரப் பூர்வமாக, இன்று இந்தியச் சந்தையில் அடி எடுத்து வைப்பதாக தெரிவித்துள்ளது. 6 வகைகளில் ஐபாட் அறிமுகம் செய்தி ருப்பதாகவும், வை பை வசதியுடன் கூடிய 16 ஜிபி, 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 3ஜி சேவையுடன் கூடிய ஐபாட்கள் அறிமுகம் செய்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வை பை தொழில்நுட்பத்துடன் 16 ஜிபி மெமரி கொண்ட ஐபாட் ரூ. 27,900க்கும், 64 ஜிபி ஐபாட் ரூ. 44,900 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் காலங் களில், 5 புதிய டேப்லெட்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

(((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: