Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் செல்போன் ஒரிஜினலா?

சைனா மொபைல்களில் IMEI (International Mobile Equipment Identification) எண் போலி யானதா என்கிற சந்தேகம் வருவது நியாமானது தான். IMEI எண் என்பது குறிப்பிட்ட மொபைல் போன் தயாரிப் பாளர்களால் குறிப்பிட்ட மாடல் போன்களின் எண்ணி க்கை மற்றும் பயனா ளர்களின் எண்ணிக்கையை கணக் கெடுக்க உரு வாக்கப் பட்டதாக இருக்கலாம். இது 15 இலக்க எண்ணா கும்.  நமது செல் போனில் சரியான IMEI எண் உள்ளதா எனக் கண்டறிய என்ன செய்யலாம்.

உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற்க்கான 15 இலக்க  IMEI எண் திரையில் வரும்.   இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு IMEI என  டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை டைப் செய்து 53232 என்ற எண்ணிற்கு SMS செய்தால் Success என பதில் வந்தால் உங்கள் போன் ஒரிஜினல்.
ஒரு சில சமயங்களில் இது சரியாக வேலை செய்யாமல் போனால், இதை ஆன்லைனிலும் சோதிக்க சுட்டி கீழே தரப் பட்டுள்ளது. ஆன் லைனில் உங்கள் போனை குறித்த மேலதிக விவரங்களும் தெளிவாக தரப்படுகிறது.
(((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: