Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மார்ச் மாத இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கும்: இயக்குனர்

கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் அணு உலைக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. அணு உலையின் பிரதான கட்டுமானத்தின் உறுதித் தன்மையை கண்டறியும் சோதனை கடந்த 25-ந்தேதி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றுள்ளோம்.
அணு உலையின் பிரதான கட்டிடம் கான்கிரீட்டால் ஆனது. இதன் சுற்றளவு 44 மீட்டர் ஆகும். உயரம் 67 மீட்டர். இதன் உள்பகுதி கார்பன் ஸ்டீல் லைன்களானது. வழிமண்டலத்தில் உள்ள காற்றின் அழுத்தத்தை விட கூடுதலாக ஒரு சென்டி மீட்டர் 4.6 கிலோ கிராம் அளவுக்கு கூடுதல் அழுத்தத்தை கட்டிடத்திற்குள் செலுத்தி மிக நுட்பமான கருவிகள் மூலம் சோதனையிடப்பட்டது.
இந்த சோதனையில் கட்டிடத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டிடத்தின் உறுதித்தன்மை இந்த சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 4000 டன் எடை கொண்ட குழாய்கள், இங்கு பதிக்கப்பட்டுள்ள 11,000 கிலோ மீட்டர் நீளமுள்ள வயர்கள் அனைத்தும் சோதனை செய்து அதன் உறுதித்தன்மை அறியப்பட்டுள்ளன.
இன்னும் 40 ஆண்டுகளுக்கு இந்த கட்டிடம் உறுதித்தன்மையோடு இருக்கும். இந்த சோதனை இந்திய தொழில்நுட்பத்துக்கும், நமது விஞ்ஞானிகளுக்கும் கிடைத்த பெருமையாக கருதலாம். வருகிற மார்ச் முதல் வாரத்தில் அணுஉலையில் செரியூட்டப்பட்ட யூரேனியம் நிரப்பப்பட்டு சோதனை நடத்தப்படும்.
மார்ச் இறுதிக்குள் முதல் கட்டமாக 25 சதவீதம் மின் உற்பத்தியும், அடுத்து 50 சதவீதம், 70 சதவீதம் என்ற அளவில் படிப்படியாக மின் உற்பத்தி தொடங்கப்படும். அதற்கு முன்பாக அவசர கால தயார் நிலை திட்டம் தயாரிக்கப்பட்டு மாவட்ட கலெக்டரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனுமதி கிடைத்ததும் அவசர காலங்களில் இங்குள்ள விஞ்ஞானிகள் எவ்வாறு செயல்படவேண்டும், மக்கள் எந்தவகையில் தங்களை பாதுகாத்து கொள்ள தயார்படுத்த வேண்டும் என்பது போன்ற ஒத்திகைகள் நடத்தப்படும். 2-வது அணு உலை அமைக்கும் பணியும் வேகமாக நடந்துவருகிறது.
வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் 2-வது அணு உலை மூலம் மின் உற்பத்தி தொடங்கப்படும். இங்கு ரஷ்ய தொழில்நுட்பத்தை நாம் பின்பற்றினாலும், அதன் நுணுக்கங்களை நமது விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர். அந்த அனுபவத்தின் அடிப்படையில் 2-வது அணு உலையை எளிதாக நம்மால் செயல்படுத்தமுடியும். 3 மற்றும் 4-வது அணு உலை அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அதற்கான அரசின் ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
(((((( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: