மின் வாரிய ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி, அண்ணா தொழி ற்சங்கம், சி.ஐ.டி.யூ., உள்ளி ட்ட ஏழு தொழிற் சங்கங்கள் இணைந்து நேற்று ஒரு நாள் மாநிலம் தழுவிய அளவில் நடத் திய பஸ் ஸ்டிரைக், பெரிய அளவில் எடுபட வில்லை. ஆளும் கூட்ட ணிக் கட்சி களைச் சேர்ந்த தொழிலாளர்களையும், தற்காலிக தொழிலாளர் களையும் பயன்படுத்தி, போதிய அளவிற்கு பஸ்களை இயக்கி, அரசு சமாளித்தது. எனினும், ஊழியர்கள் நடத்திய போராட்ட ங்களால் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது.
எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலா ளர்கள், நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை எதிர்கொள்வதற்கு, ஆளும் கட்சி தயாராக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, ஆளும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடன் தற்காலிக டிரைவர்கள், கண்டக்ட ர்களைப் பிடித்து, பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி, தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், தற்காலிக ஊழியர்களை வைத்து, போதிய அளவிற்கு பஸ்களை இயக்கி, அரசு சமாளித்தது. எனினும், ஊழியர்கள் நடத்திய போராட்டங்களால், பல இடங்களில் வன்முறை வெடித்தது.
தலைநகர் சென்னையில், திருவொற்றியூர், எண்ணூர், திரு வான்மியூர், ஐ.சி.எப்., வில்லிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மர்ம நபர்கள், மாநகர பஸ்கள் மீது கற்களை வீசி, தாக்குதல் நடத்தினர். இதனால், பஸ்களின் கண்ணாடிகள் தூள், தூளாயின. இந்த சம்பவங்களில், டிரைவர்கள் காயம் அடைந் தனர். கிண்டியில் இருந்து, திரு.வி.க., நகர் சென்ற பஸ்சை, பாடி மேம்பாலம் அருகே மர்ம நபர்கள் வழி மறித்து, கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதேபோல், தி.நகர், சி.ஐ.டி., நகரில் சென்று கொண்டிருந்த தடம் எண்”19 எச்’ பஸ்சை, அதிகா லையில் இரண்டு பேர் கல் வீசி தாக்கினர். இதில், கண்டக்டர் ராஜு காயம் அடைந்தார். ஆவடி, அம்பத்தூர், அய்யப்பன் தாங்கல், திருப்போரூர், மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் ஊழியர்கள் நடத்திய போராட்டங்களால் வன் முறை ஏற்பட்டது. ஊழியர்கள், “மப்டி’யில் இருந்தபடி, போராட்ட ங்களில் ஈடுபட்டதால், வன்முறை சம்பவங்களில் யார், யார் ஈடுபட்டனர் என்ற விவரம் தெரியாமல் போலீசாரும், போக்குவரத்து துறையினரும் முழித்தனர்.
ஈரோடு மண்டலத்தில் குறைவான பஸ்களே இயங்கின. கோபி கிளையில் உள்ள 97 அரசு பஸ்களில் 84 பஸ்களும், கவுந்தப் பாடி கிளையில் 63 பஸ்களில் 42 பஸ்களும் இயக்கப்பட்டன. நம்பியூர் கிளையில் உள்ள 67 பஸ்களில், 21 பஸ்கள் மட்டும் இயங்கின. பகல் 2.30 மணிக்கு மேல், ஊழியர்கள் பற்றாக் குறையால் மேலும் பல பஸ்கள் நிறுத்தப்பட்டன. ஈரோடு மண்டல பொது மேலாளர் சவுந்திரராஜன், “72 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன’ என்றார்.
அரசு கருத்து: ஸ்டிரைக் குறித்து, போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஸ்டிரைக்கால் எந்த பாதிப்பும் இல்லை. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்தது. விடுமுறையில் இருந்தோர், பயிற்சி ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வந்ததால், மாநிலம் முழுவதும் வழக்கத்தை விட கூடுதலாக பஸ்கள் இயக்கப் பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை’ என்றார்.
20 சதவீதம் பஸ் ஊழியர்கள் மதுரையில் பணிக்கு வர வில்லை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் மதுரையில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. டவுன்பஸ்கள், மொபசல் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின. அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., பணியாளர் சம்மேளனம் உள்ளிட்ட சில சங்கங்களின் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. 20 சதவீதம் பேர் “ஆப்சென்ட்’ ஆகியிருப்பர் என போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுமேலாளர் வெங்கடாச்சலத்திடம் கேட்டபோது, “”முன்னெச் சரிக்கையாக சில நடவடிக்கைகள் எடுத்ததால் எந்த பகுதியிலும் பஸ்களின் இயக்கம் பாதிக்கவில்லை. பணிக்கு வராத ஊழியர்களுக்கு, “சார்ஜ் மெமோ’ வழங்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். “மொத்தமுள்ள 6500 ஊழியரில் 2800 பேர் வரை பணிக்கு வரவில்லை. முப்பது சதவீத ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை. மேலூர், சோழ வந்தான் போன்ற புறநகர் பகுதிகளில் காலை நேரத்தில் தாமத மாகவே பஸ்கள் இயக்கப்பட்டன. தினக்கூலி, ரிசர்வ் தினக்கூலி பணியாளர்களை வைத்து பஸ்களை இயக்கினர்,’ என போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறினர்.
எதிர்க்கட்சிகளின் திட்டத்தை ஆளுங்கட்சி முறியடித்தது எப்படி? சமீபத்திய ஆண்டுகளில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, இன்னும் நிரந்தரமாகாத டிரைவர், கண்டக்டர்கள் போராட் டத்தில் கலந்து கொள்ளாமல், கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும்; வார விடுமுறை தினமாக இருந்தாலும் நிச்சயம் பணிக்கு வர வேண்டும் என்று அதிகாரிகள் ஏற்கனவே கண்டிப்புடன் உத்தரவிட்டிருந்தனர். மேலும், “பணி நிரந்தரம் ஆகாத பணியாளர்கள், பணிக்கு வராவிட்டால் பல சிக்கல் களை சந்திக்க நேரிடும்’ என்று ஆளும் கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் பிரசாரம் செய்தனர். இதனால் பீதி யடைந்த ஊழியர்கள், நேற்று சரியான நேரத்திற்கு பணிக்கு வந்தனர். “சீனியர்’ பணியாளர்களுக்கும் நேற்று விடு முறையோ, வார விடுமுறையோ வழங்கவில்லை. நேற்று பணி செய்துவிட்டு, வேறு ஒரு தினத்தில், “சி.ஆப்.,’ எடுத்துக் கொள்ள அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். ஒவ்வொரு டிப்போ விலும் பிரேக் டவுண் செக்ஷன், வாட்டர் சப்ளை, கேன்டீன், எப்.சி., வாகனங்கள் உள்ளிட்ட அலுவலக வாகனங்களை இயக்கும் ஆளும் கட்சியைச் சேர்ந்த டிரைவர்கள் நேற்று பயணிகள் வழித்தடங்களில் பஸ்களை இயக்க அனுப்பி வைக்கப் பட்டனர்.
கண்காணிப்பாளர், நேரக்காப்பாளர் மற்றும் அலுவலக கணக்கு பணிகளில் ஈடுபட்டிருந்த ஆளும் கட்சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கண்டக்டர்களும் வழித்தடத்தில் பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னையை பொறுத்தவரை, பெரும் பாலான பணிமனைகளில் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்த டிரைவர், கண்டக்டர்களை வீட்டிற்கு செல்லவிடாமல், டிப்போவிலேயே அதிகாரிகள் தங்க வைத்தனர். இதன் பயனாக மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று வழக்கம் போல பஸ் களை இயக்கியது. காலை “ஷிப்ட்’டில் அண்ணாநகர் பணி மனையில் 30 பஸ்களும், அய்யப்பன்தாங்கல் பணி மனையில் 20 பஸ்களும் இயக்கப்படவில்லை. மற்ற பணிமனைகளில் ஓரிரு வழித்தடத்தில் மட்டும் பஸ்கள் இயங்கவில்லை. “மதிய ஷிப்ட்’டில் வழக்கம் போல பஸ்கள் இயக்கப்பட்டன. காலதாமதமாக பணிமனைக்கு வந்த டிரைவர்கள் மூலம் மாலை, 4 மணி வரை டிப்போவில் இருந்து பஸ்கள் வழித் தடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
(((((( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))