Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் சென்னை யில் இன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தினர். மெமோ ரியல் ஹால் அருகே நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்ட த்திற்கு மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார்.
நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் சிறப்புரையாற்றி னார். அவர் பேசுகையில் பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகா பாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு சட்டத்துக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு என்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் கருதுகிறது.
எனவே உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு தானாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். மாநில துணைத் தலைவர் ரகமத் துல்லா உள்பட ஏராள மான பிரமுகர்களும் பேசி னார்கள்.  ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களும் எழுப்பப் பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பஸ் -வேன்களில் வந்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் ஐகோர்ட்டை நோக்கி முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்ததால் ஏராளமான போலீசார் குவிக் கப்பட்டு போக்குவரத்தை திருப்பி விட்டனர்.

((((((  நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: