Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பால் ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவு

பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது. பாலில் தாய்ப்பால், பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் என சில வகைகள் உண்டு. ஒவ் வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது.

தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும், தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும். பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது, உடலுக்கு குளிர்ச்சி  தருவது.  

எருமைப்பால் அதிகப் கொழுப்பு நிறைந்தது. உடலுக்கு நல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச்சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. ஆட்டுப் பாலில் மனித உடலு க்குத் தேவையான நிறைய சத்துக்கள் உள்ளன. ஆட்டுப் பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சு திணறல் போன்ற சுவாசப் பிரச் சனை களுக்கு ஆட்டுப்பால் நல்லது. வயிற்றுப்போக்கு உள்ள வர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும்.

ஆனால், ஆட்டுப்பால் அதை கட்டுப்படுத்தும்! பால் குடித்ததும் புத்துணர்வு தரக்கூடியது. பசும்பால் குடித்து வந்தால் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலாம். சோர்வாக இருப்பவர் களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கும் போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக் கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மருந்தாக உள்ளது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. இதில் பிரதான மானது பசும்பால். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம்.

ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக் காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும் பாலில் மட்டும்தான் இருக்கிறது. பால், மாட்டின் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச்சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.

(((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

2 Comments

  • bruce

    பால் என்பது இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் இருந்து பிரிக்கப்பட்டது என்பது இன்றைய நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பாகும்.மேலும் இரத்தத்தில் இருந்து தான் பால் உருவாகிறது என்பது அறிவியல் அறிஞர்களின் கருத்தாகும்….
    மீண்டும் உண்மை தெரியாமல் பதிவை வெளியிட்டுள்ளது நகைப்பிற்குரியது….

    • பசு மாடு எதை உண்கிறது. தாவர வகைகளையும், அதிலிருந்து வந்த கழிவுகளான பிண்ணாக்கு, தவிடு போன்றவைகளைத்தானே உண்டு வருகிறது.

      அந்த உணவு, பசுவின் உடலுக்குள்ளே சென்று, செரிமானம் ஆகி, ரத்த‍மாகவும் சாணமாகவும் பிரிகிறது. இந்த அடிப்படையைக்கூட உங்களால் யூகிக்க‍ முடியவில்லையே

      எதையுமே உண்ணாமல் தானாகவேவா பால் சுரக்கிறது.

      தங்களின் தவறான கருத்தினை படிக்கும் எனக்கு அடக்கமுடியாத சிரிப்புத்தான். சிரித்து சிரித்து வயிறே புண்ணாகி விட்ட‍து போங்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: