Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‌வீ‌ட்டி‌லிரு‌க்கு‌ம் மரு‌ந்து பொரு‌ட்க‌ள்

கொசு கடித்தபின் ஏற்படும் அரிப்பி லிருந்து நிவாரணம் பெற, கொசு கடித்த இடத்தில் சிறிது சோப்பைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மிளகைப்போட்டு வைத்த கஷாயத்தைக் குடித்து வந்தால் ஜுரம் குணமாகும்.

மிளகுப்பொடி, நெய், சர்க்கரை, தேன் ஆகியவைகளைக் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும்.

சாப்பிடும்போது நெய்யில் வறுத்த ஏழெட்டு மிளகுகளை முதலில் சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று வலி முதலியன வராது.

உணவோடு இஞ்சி சேருவதால் சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிறது. இஞ்சித் துவையலை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. வயிற்று வலி நிற்கும்.

ஜுரம் வந்து குணமானவர்களுக்கு இஞ்சித் துவையல் செ‌ய்து கொடு‌க்கலா‌ம். இ‌ஞ்‌சி துவைய‌ல் சா‌ப்‌பி‌ட்டா‌ல் வாய் கசப்பு போய், நா‌க்கு‌க்கு சுவை ‌கிடை‌க்கு‌ம்.

(((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: