Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஈடன் விவகாரம்: பி.சி.சி.ஐ., “அப்பீல்’

ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க இருந்த உலக கோப்பை போட்டியை ஐ.சி.சி., ரத்து செய்தது. இதனை எதிர்த்து அப்பீல் செய்ய பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது.

வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் (பிப்., 19-ஏப்.,2), கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி உட்பட, மொத்தம் நான்கு ஆட்டங்கள் நடக்க இருந்தன. ஆனால் மைதானத்தில் புதுப்பித்தல் பணி, நிறைவு பெறவில்லை என்பதால், பிப்., 27ல் நடக்க இருந்த இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான போட்டியை, வேறு மைதானத்தில் நடத்த ஐ.சி.சி., முடிவெடு த்தது.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) பேசி, கூடுதல் கால அவகாசத்தை பெற்றுத் தர வேண்டும் என, சி.ஏ.பி., தலைவர் டால்மியா வேண்டு கோள் விடுத்துள்ளார்.

கூடுதல் அவகாசம்:இதுகுறித்து அவர் அனுப்பிய கடிதத்தில்,”” ஐ.சி.சி., தெரிவித்துள்ள கவலைகள் அனைத்தும் சரியானவை தான் என்பது தெரியும். இருப்பினும், இன்னும் ஒரு பத்துநாள் அவகாசம் கொடுத்தால் (வரும் பிப்., 7) அனைத்து வித வேலைகளையும் முடித்து விடுகிறோம்,” என, தெரிவித்துள்ளார்.

இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,””ஐ.சி.சி., முடிவை எதிர்த்து அப்பீல் செய்ய உள்ளோம். இதற்கான கடிதத்தை ஐ.சி.சி.,க்கு அனுப்ப இருக்கிறோம். ஈடன் கார்டனில் திட்டமிட்டபடி போட்டிகள் நடக்கும் என நம்புகிறோம்,”என்றார்.

வீரர்கள் ஏமாற்றம்:இந்நிலையில், புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் இருந்து, போட்டி மாற்றப்பட்டதால், இங்கிலாந்து வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தனது “டுவிட்டர்’ இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில்,”” ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட, ஈடன் கார்டன் மைதானம், உலக கோப்பை போட்டிக்கு முன் தயாராகாதது வெட்கக்கேடானது. இது மிகவும் ஏமாற்றம் தருகிறது,” என தெரிவித்துள்ளார்.

செயல்திட்டம் இல்லை:மற்றொரு இங்கிலாந்து வீரர் டிரம்லெட் கூறுகையில்,” இந்தியா, இங்கிலாந்து போட்டியை காண, நிறைய ரசிகர்கள் ஏற்கனவே விமான டிக்கெட் பதிவு செய்து வைத்திருப் பார்கள். இங்கு செல்வதற்காக ஏகப்பட்ட பணத்தை செலவிட்டு இருப்பார்கள். இந்நிலையில் கடைசி நேரத்தில் போட்டி அங்கிருந்து மாற்றப்பட்டது நிறைய இழப்புதான். மிகப் பெரிய தொடரை நடத்தவுள்ள நிலையில், சரியான செயல் திட்டம் இல்லாமல் இருப்பது அவமானம்,” என்றார்.

(((((( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: