Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாசகருக்கு ஏற்பட்ட பிரச்சனையும் அதற்கு விதை2விருட்சம் இணையம் வழங்கிய தீர்வும்

விதை2விருட்சம் இணையதள வாசகர், சுகுமார், நம்மிடம் அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு கேட்டும் அதற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கிடவும் கோரி vidhai2virutcham@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தார். அதற்கு விதை2விருட்சம் இணையதளம் தகுந்த  ஆலோசனைகளை அவருக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தோம்.

அவரது முழு சம்ம‍தத்துடன், அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை யையும், அவருக்கு விதை2விருட்சம் வழங்கிய ஆலோசனை களையும் விதை2விருட்சம் இணையதளத்தில் வெளியிடு கிறோம்.

அன்பார்ந்தவர்களுக்கு,
இன்னலில் சிக்கித் தவிக்கும் ஓர் இளைஞனின் கடிதம்

என் பெயர் சுகுமார், எனக்கு வயது 28, நான் ஓரு வேலைக்கு செல்லும் பட்டதாரி, மாதம் ரூ.10,000 ஊதியம் வாங்குகிறேன்.

என் பெரியப்பாவின் பேத்தி (என் அக்கா மகள்) மலர் வயது 17, 11 ஆம் வகுப்பு படிக்கிறாள்.  நான் எல்லோரிடமும் சகஜமாகவும், அனைவரும் விரும்பும் வகையிலும் பேசுபவன், எங்கள் உறவினர்கள் வீட்டு விழாக்கள் அனைத்திலும் நான் இருந்தால் கலைகட்டும் என அனைவரும் கூறுவர். என் அக்கா மகளுக்கு என் மீது அதீத ப்ரியம், நானும் சின்ன பெண் என்பதால் சற்று விளையாட்டாக இருப்பேன். ஆனால் விளையாட்டு என் பேச்சில் மட்டும்தான் இருக்கும். எந்த ஒரு தவறான செயலும் மேற்கொள்ள மாட்டேன். ஆனால் கடந்த ஒரு வருடமாக மலரின் நடவடிக்கைகள் என்னை பயப்படுத்துவதாக உள்ளது. மலர் ஒரு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கிறாள். விடுதியில் தங்கி படிப்பதால், பண்டிகை விடுமுறைக்கு மட்டும்தான் வருவாள். அவள் வரும் போதெல்லாம் அவளின் அப்பாவின் கைபேசியின் மூலம் என்னுடன் பேசுவாள், அல்லது செய்தி அனுப்புவாள். ஒரு முறை நான் கேட்ட போதுதான் எனக்கு தெரிந்தது. அவள் பெற்றோருக்கு தெரியாமல்தான் என்னுடன் தொடர்பு கொள்கிறாள் என்று, நான் அவளை கண்டித்தேன். ஆனால் அவள் என்னைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், கூறினாள். அவள் என்னைவிட அழகிதான், என் தகுதிக்கும், திறமைக்கும், குணங்களுக்கும் ஏற்றவள்தான். ஆனால் என் கவலை என்னவென்றால், மலர் 17 வயது பெண். நான் 28 வயது ஆண். எங்களுக்குள் அதிக வயது வித்தியாசம் உள்ளதாக உணர் கிறேன். எதுவாயினும் இன்னும் 3 ஆண்டுகள் கழித்துத்தான் என் திருமணம். என் தவிப்பு என்ன வென்றால், 11 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொள்வது சரியா? தெளிவான தொரு தீர்வை தரும்படி தாழ்வுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் பதிலை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,  தங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கும்
சுகுமார், சேலம்

விதை2விருட்சம் வழங்கிய ஆலோசனை

பண்பாளர் சுகுமார் அவர்களுக்கு,

தங்களுடைய மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றேன். உங்கள் கடிதத்தை படித்துப்பார்த்தில், உங்கள் வயதுக்கே உரிய ஆசைகளும், உங்கள் வயதுக்கு மீறிய பக்குவமும் இருப்பதை நான் உணர்கிறேன். நீங்கள் அனுப்பிய கடிதத்தை ஒரு மனநல மருத்துவரிடம் கூறினேன். அதற்கு அவர் சொன்ன பதிலை உங்களுக்கு அப்படியே தெரிவிக்கிறேன்.

உங்களுடைய அக்கா மகளுக்கு வயது 17 என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆகையால் அவளுக்கு உங்கள் மீது ஏற்பட்டுள்ளது காதல் அல்ல முழுக்க முழுக்க இனக்கவர்ச்சியே!

அதுமட்டுமல்லாது இந்த வயதில் காதல், திருமணம் என்று சென்றால்,  நாளையே அவளுக்கு சிறு பிரச்சனை ஏதாவது வந்தால் கூட உடனே தேவையற்ற முடிவுக்கு செல்வாள்,

அதோடு மட்டுமின்றி திருமணத்திற்கு பின்பு இந்த இளம் வயதில் குழந்தையை பெற்றுக்கொள்ளும்போது அதை தாங்கும் வலிமை, மன தளவிலும் சரி, உடலளவிலும் சரி கிடையாது.

உங்கள் மீது அவளுக்கு இருக்கும் இனக்கவர்ச்சியை பக்குவமாக நீங்களே எடுத்துக்கூறி, காதலுக்கு இது வயதல்ல என்பதையும் இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் ஆகட்டும் அதுவரை உங்கள் மீது அவளுக்கு இருக்கும் காதல் இப்போது இருப்பது போலவே அப்போதும் இருந்தால், சரி என்பது போலவோ அல்லது வேறு ஏதாவது காரணத்தை சொல்லியோ அவளுக்கு புரிய வைக்க முயற்சிக்கலாம்.

உங்கள் அக்கா மகள் மலரை, நன்றாக படித்து, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று அவளது அப்பா அம்மாவுக்கு நல்ல பெயர்  நல்ல சந்தோஷத்தை கொடு என்றும் அவர்கள் அவள் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் எடுத்துக்கூறி இந்த காதல் எல்லாம் இப்போது வேண்டாம் என்று எடுத்துக்கூறுங்கள்.

அல்லது
உங்களது பெற்றோரிடமோ அல்லது உங்கள் அக்காவிடமோ உங்கள் நிலையை எடுத்துச் சொல்லி அவளிடம் பக்குவமாக எடுத்துக்கூறி புரிய வைக்க‌ சொல்ல‌லாம்.

என்றே அந்த மனநல மருத்துவர் என்னிடம் தெரிவித்தார். அவர் தெரிவித்ததை  உங்களிடம் தெரிவித்திருக்கிறேன். தங்களு டைய பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும் என்றே நம்புகிறேன்.

நன்றி
என்றென்றும் உங்கள்
விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: