Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

43 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் பணிபுரிந்த முதியவர்

இங்கிலாந்தில் உள்ள எஸ் செஸ் என்ற இடத்தை சேர்ந் தவர் ஜிம்ஓவன் (66). தற் போது இவர் பாசில் டன் கவுன் சிலில் பணி புரிகிறார். இங்கு அவர் கடந்த 1968-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வரு  கிறார். அன்று முதல் இன்று வரை அதாவது 43 வருட ங்கள் ஒரு நாள் கூட விடு முறை எடுக்காமல் பணியாற்றி வருகிறார். இந்த தகவலை அந்நாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது.
தனது பணி குறித்து ஜிம் ஓவன் கூறும்போது, தினமும் அதி காலையில் எழுகிறேன். தினமும் மகிழ்ச்சியுடன் எனது பணியை தொடங் குகிறேன். இது எனக்கு உற்சாகத்தை அளிக் கிறது. மேலும் நான் சத்தான உணவுகளை சாப்பிடுகிறேன். புகைப் பிடிக்கும் பழக்கம் கிடையாது. வேலை செய்யும் போது சுத்தமான காற்றை சுவாசிக் கிறேன்.
எனவே நான் ஆரோக்கியமாக வாழ்கிறேன். தற்போது எனக்கு ஓய்வு பெறும் வயதுதான். இருந்தாலும் பணியில் இருந்து ஓய்வு பெற நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். ஜிம் ஓவனுக்கு 2 மகன் களும் 3 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
( ( ( ( ( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ) ) ) )

Leave a Reply

%d bloggers like this: