சிந்து சமவெளி, மைனா பட கதாநாயகி அமலாபால் இன்று கோ
வை வந்தார். கோவை ரேஸ்கோர்ஸ் ஜி.டி. சாலையில் நடந்த ஒரு நிகழ்ச்சி யில் பெண்களுடன் கலந்துரை யாடினார். அதனை தொட ர்ந்து நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய தாவது:-
நான் பிறந்தது கேரளா. எனக்கு தமிழ் பல உலகில் முக்கிய இடம் கிடைத்துள்ளது. ஏற்கனவே தமிழில் நான் நடித்த 2 படம் வெற்றி பெற்றுள்ளது. மைனா படம் எனக்கு 
பேரும், புகழும் பெற்று தந் தது. தற்போது மத ராச ப்பட்டினம் டைர க்டர் விஜய் இயக் கும் பிதா, முப்பொ ழுதும் உன் ஞாபக ங்கள், லிங்கு சாமி இயக்கும் படத்தி லும் நடிக்க ஹால்சீட் கொடுத்துள்ளேன். மே லும் சில பட ங்களில் நடிக்க பேச்சு வார்த் தை நடந்து வருகிறது.
மலையாளத்தில் நான் நடித்த படம் விரைவில் வெளி வர உள்ளது. பெண்கள் தங்கள் உடல் அழகையும், ஆரோக்கியத்தை யும் பேணி காப்பது முக்கியம். கண்ட கண்ட பொருட்களை சாப்பிடக் கூடாது. உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை சேர்த்து கொண்டால் இளமையாகவும், அழகாகவும் இருக்கலாம். குண் டான பெண்கள் ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைக்கலாம். இவ்வாறு நடிகை அமலா பால் கூறினார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த பேட்டி )