Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஃபோஸ்டர்’ஸ் இரண்டாகப் பிரிகிறது

ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில் மதுபான தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவன மான ஃபோஸ்டர்’ஸ், நிறுவன த்தின் நிகரலாபம் கணிசமாக சரிந் ததையடுத்து, ஒயின் மற்றும் பீர் என்ற இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட உள்ளதாக தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக, ஃபோ ஸ்டர்’ஸ் நிறுவனம் வெளி யிட்டு ள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆஸ்திரே லியாவில் கடந்த மாதத்தில் பெய்த கனமழை காரணமாக, கண் டமே, வெள்ளக்காடாக மாறியது. இதில் நாட்டு மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்குப் பிறகு கடுமையாக பாதிக் கப்பட்டது தாங்கள் தான் என்று அவர்கள் தெரிவித் துள்ளனர். குறிப்பாக, குயின்ஸ்லாண்ட் பகுதியில் தங்கள் நிறுவனம் பெரும் சேதத்தை சந்தித்தது. இதன் காரணமாக, நிறுவனத்தின் விற் பனை கடுமையாக பாதித்தது. விற்ப னை பாதி்த்ததன் விளை வாக நிறுவனத்தின் வளர்ச்சி தற் போது கேள்விக்குறியாகி உள்ளது. 2009ம் நிதியாண்டில், 355.7 மில்லியன் ஆஸ்தி ரேலிய டாலர்களாக இருந்த நிறுவன நிகர லாபம், கடந்த நிதி யாண்டில் 312.1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக சரிவடை ந்துள்ளது. இந்த நிகரலாப சரிவால், மொத்த யூனிட்டையும் ஒன்றுசேர நிர்வகிக்க முடியாத காரணத் தினால், ஃபோஸ்டர்’ஸ் நிறுவன த்தை ஒயின் மற்றும் பீர் என்ற பிரிவுகளாக பிரித்து நிர்வகிக்க உள்ளதாக அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த பிரிக்கும் எண்ணம், கடந்த ஆண்டு மே மாதமே எடுக்கப்பட்ட தாகவும், அதை தற்போதுதான் நடை முறைப்படுத்தியுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நாளேடு ஒன்றில் கண்டெத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: