Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்புகள்: புருவங்கள் அழகாக‌…

*புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே மிகவும் நல்லது. சிலர் வாக்சிங் முறை யிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் நாளடைவில் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே வாக்சிங் முறை யில் புருவங்களை நீக்க கூடாது .

*சிலர் பிளேடு உபயோகித்துப் புருவ ங் களை ஷேப் செய்வதும் உண்டு.  இந்த முறை மிகவும் ஆபத்தா னது. அப்படி அகற்றும் போது அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது மிகவும் அடர்த்தியாக மற்றும் ஒழுங்கற்ற முறையில் வளரும்.எனவே இவ்வாறு செய்ய கூடாது.
*புருவங்கள் நரைத்திருந்தால் மஸ்காராவை உபயோகித்து கருப்பாக்கிக் கொள்ளலாம். மஸ்காரா பிரஷ்ஷை லேசாகக்காய வைத்து நரையை மறைக்கத் தடவலாம். ஐ ப்ரோ பென்சில் உபயோகிப்பதை விட இப்படிச் செய்வது மிகவும் அழகாக, இயற்கையாக இருக்கும்.
*கண்களுக்கு அடிக்கடி ஐ பேட் உபயோகிக்கலாம். இது கண்கள் குளிர்ச்சி அடைவதற்கும், புருவங்களின் சீராக வளர்வதற்கும் உதவும்.
*புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், ரேஸ்மெரி, மாதிரியான அரோமா எண்ணெய்கள் மிகவும் சிறந்தவை. அவற்றை சூடு படுத்தாமல் அப்படியே மசாஜ் செய்ய உபயோகிக்க வேண்டும்.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: