சோஷியல் நெட்வொர்க் தளங்களைத் தானாக அப்டேட் செய் திடும் வசதியினைக் கொ ண்டு, இளைஞர்களை அதி கம் கவர்ந் திடும் நோக் கத்துடன் வடிவமை க்கப் பட்டு வந்துள்ளது, எச்.டி. சி.யின் வைல்ட் பயர் 3ஜி மொபைல் போன்.
3.2 அங்குல அகலத்தில் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்டு 5 எம்பி கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் போன், மைக்ரோ எஸ். டி. மெமரி கார்ட் ஸ்லாட், 528 மெஹா ஹெர்ட்ஸ் (குவால்காம் ப்ராசசர் MSM 7225 528 MHz) வேகத்தில் இயங்கும் ப்ராசசர் எனப் பல கூடுதல் திறன் கொண்ட வசதிகளுடன் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
இதன் நினைவகம் 384 எம்பி கொள்ளளவு கொண்டது. 32 ஜிபி வரை கார்ட் மூலம் இதனை அதிகப்படுத்தலாம். நான்கு வண்ண ங்களில் பார் டைப் மாடலாக இதன் வடிவம் உள்ளது. இதன் பரிமாணம் 106.8 x 60.4 x 12 மிமீ. எடை 118 கிராம்.
5 எம்பி திறன் கொண்ட டிஜிட்டல் ஸூம் கேமரா, ஜியோ டேக்கிங், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ் டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில், எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, ட்ரேக் ஐ.டி. ஆகிய வசதிகள் உள்ளன.
கூகுள் சர்ச், மேப்ஸ் மற்றும் ஜிமெயில் இணைந்து கிடைக் கின்றன. யு-ட்யூப், கூகுள் டாக், பிகாசா ஆகியவையும் இதன் இயக்கத்தில் இணைக்கப் பட்டுள்ளன.
திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. இது 680 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 8 மணி நேரம் வரை பேச முடியும்.
மிகச் சிறப்பான அம்சமாக இதன் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் இயக்கத் தினையும், டச் சென்சார் யூசர் இன்டர்பேஸ் செயல் பாட்டினையும் கூறலாம். இதன் அதிக பட்ச விலை ரூ.13,140.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்