Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஐகான் கார் உற்பத்தி நிறுத்தம்: : ஃபோர்டு அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு இந்தியா நிறுவனம், புதிய மாடல் கார்களி்ன் உற்பத்தியை அதி கரிக்கும் வகையில், ஐகான் கார் உற்ப த்தியை நிறுத்திவிட்டதாக ஃபோர்டு நிறுவ னம் அறிவித்துள்ளது. ஃபோர்டு நிறுவ னத்தின் முத்திரை பதித்த மாடல் களில் ஒன்றாக ஐகான் கார் திகழ்ந்தது. கடந்த 9 ஆண்டுகளாக பல இந்திய வாடிக் கையாளர்கள் மனதை கொள்ளை கொண்ட ஃபோர்டு ஐகானுக்கு மாசு கட்டுப்பாடு விதிகள் வடிவில் சோதனை காலம் வந்தது. இந்தநிலையில், ஃபோர்டு நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த பிகோ கார் இலக்கை விஞ்சி விற்பனையானது. இதையடுத்து, பிகோ உற்பத் திக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஐகான் கார் உற்பத்தியை ஃபோ ர்டு இந்தியா படிப்படியாக குறைத் தது. பாரத் ஸ்டேஜ்-4 மாசுக் கட்டுப்பாடு விதிகள் அமல்படுத் தப்பட்ட நகரங்களில் ஃபோர்டு ஐகான் விற்பனை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 1ந்தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் ஃபோர்டு ஐகான் விற்பனை நிறுத்த ப்பட்டுள்ளது. ஃபோர்டு ஐகான் உற்பத்தி நிறுத்தப்ப ட்டாலும், வாடிக்கை யாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை. ஐகானுக்கு தொடர்ந்து சர்வீஸ் வசதி, உதிரிபாகங்கள் உள்ளிட் டவை தங்குதடையின்றி கிடைக்கும்,’ என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

(நாளேடு ஒன்றில் கண்டெத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: