Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஐ-பாடும், டேப்ளட் பிசியும், அதன் பயன்பாடுகளும்

ஆப்பிள் நிறுவனம் அதிகார பூர்வமாகத் தன் ஐ-பேட் சாதனத்தை, இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்னர் விற்பனைக்கு வெளி யிட்டது. இதனை வாங்கிப் பயன் படுத்த விரும்பும் பலருக்கும் இது குறித்து பல சந்தேகங்கள் எழுகி ன்றன. மேலும் பல வினாக் களும் தோன்றுகின்றன. வாசகர் களின் கடிதங்கள் இவற்றைப் பிரதிபலிக் கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

1. ஐபேட் ஏன் இந்தியாவில் இவ்வளவு தாமதமாக அறிமுகப் படுத் தப்படுகிறது?

டிஜிட்டல் சாதனச் சந்தையில் இயங்கும் பலரும் இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் மேல் கோபமாக இருக்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை அவ்வளவாகக் கண்டு கொள்வதாக இல்லை. ஐபேட், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கூட சென்ற ஜுலை 2010ல் (அமெரிக்காவில் ஏப்ரல் 2010)அதிகாரபூர்வ விற்பனைக்கு வந்தது. ஆனால் இந்தியாவில் ஆறு மாதங்கள் கழித்தே வந்துள்ளது. ஐபேட் பதிப்பு 2 வர இருப்பதாகச் செய்திகள் வந்துள்ள நிலையில், ஆப்பிள் இருப்பில் இருக்கும் தன் ஐபேட் சாதனங்களை இங்கு கொண்டு வந்து கொட்டுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஐபோன் விஷயத்திலும் இதே கதைதான் ஏற்பட்டது.

2. ஐ-பேட் வாங்கினால், நான் மட்டுமே முதலில் வாங்கிய ஆளாக இருப்பேனா?

நிச்சயமாக இல்லை. கிரே மார்க்கெட் என்னும் அதிகாரப் பூர்வமற்ற சந்தையில் நிறைய ஐ-பேட்கள் விற்பனை செய்யப் பட்டன. பலரும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ஏறத்தாழ 50 ஆயிரம் ஐ-பேட் சாதனங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருவதாக ஒரு கணக்கீடு தெரிவிக்கிறது. எனவே நீங்கள் வாங்கிப் பயன்படுத்தினால், துணைக்கு நண்பர்கள் கிடைப் பார்கள். உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்காவில் இதனை அறிமுகம் செய்த போது, பலர் இரவோடு இரவாக விற்பனை செய் திடும் கடைகள் முன்பாக நின்று வாங்கிச் சென்றனர்.

3. நான் ஐபேட் 2 வரும் வரை காத்திருந்து வாங்கலாமா?

இன்டர்நெட்டில் ஐபேட் 2 குறித்து தகவல் திரட்டிய போது, அதில் இரண்டு கேமராக்கள் (வீடியோ அழைப்பில் பயன்படுத்த ஒன்று) , அதிவேக ப்ராசசர், நல்ல காட்சித் திரை ஆகியன இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்ததைப் பார்க்க நேர்ந்தது. சாம்சங், மோட்டாரோலா, ஆர்.ஐ.எம். போன்ற நிறுவனங்களும், இந்த சந்தையில் போட்டியில் இறங்கி இருப்பதால், ஐ-பேட் அளவு கூட சற்று சிறியதாக, பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்லும் அள வில் இருக்கலாம். இவை வேண்டும் என்றால் காத்திருக்கலாம்.

4. கடைகளில் சென்று இப்போது ஐ-பேட் வாங்கிட முடியுமா?
ஆப்பிள் நிறுவனப் பொருட்களை விற்பனை செய்வதற்கென்றே சில மையங்கள் இயங்குகின்றன. அங்கு இவை கிடைக்கின்றன. வழக்கம்போல, மற்ற கடைகளில் கிரே மார்க்கெட்டிலும் கிடைக் கின்றன. சென்னையில் ஒரு கடையில் சென்ற மாதம் ரூ.5,000 முன்பணமாகப் பெற்று பதிவு செய்தனர்.

5. எத்தனை மாடல்கள் வெளியாகி யுள்ளன? விலை எவ்வளவு?
ஆறு மாடல்கள் கிடைக்கின்றன. வை-பி நெட்வொர்க் இணைப்பு டன் 16ஜிபி, 32 ஜிபி, 64 ஜிபி மெமரியுடன் மூன்று மாடல்கள். வை-பி யுடன் 3ஜி இணைந்த மூன்று மாடல்கள் இதே மெமரி யுடன் கிடைக்கின்றன. முதல் வகை வை- பி மட்டும் கொண்ட ஐபேட் விலை முறையே ரூ. 27,900, ரூ. 32,900, ரூ.37,900. இவற்றில் 3ஜி இணைந்த மாடல்கள் விலை ரூ. 34,900, ரூ. 39,900 மற்றும் ரூ. 44,900.

6. ஐ-பேட் சாதனத்தில் என்ன செயல்பாடு களை மேற்கொள்ள முடியும்?

ஐ-பேட் ஒரு டச்ஸ்கிரீன் கம்ப்யூட்டர். டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரைப் போல அதிகத் திறனுடன் இருக்காது. ஆனால் தொலை தொடர்பு மற்றும் பொழுதுபோக்கிற்கு அருமையான சாதனம். பொதுவாக, உலக அளவில், ஐ-பேட் சாதனம் இன்டர்நெட் பார்க்க, இமெயில் அனுப்ப, நண்பர்களுடன் இன்ஸ்டன்ட் மெசேஜ் அனுப்ப, பெற, (ஆன் ஸ்கிரீன் கீ போர்டு மூலம்), புகைப்படங்களை பிரவுஸ் செய்திட, இசையை ரசித்துக் கேட்க, திரைப்படங்கள் பார்க்க, இ-புக் படிக்க, செய்தித்தாள்கள், பருவ இதழ்கள் படிக்க மற்றும் சாட்டிலைட் உதவியுடன் வழி காட்டுதலைப் பெற பயன்படுத்தப்படுகிறது.

7. என்னுடைய லேப் டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, ஐ-பேட் சாதனத்தைப் பயன்படுத்தலாமா?

முழுமையாக முடியாது. இது ஒரு துணை சாதனம் தான். சோஷியல் நெட்வொர்க் பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தலாம்.

8. தொலைபேசி அழைப்புகளை ஐ-பேடில் ஏற்படுத்த முடியுமா?
முடியாது.

9. ஐ-பேட் எவ்வளவு பெரியது? அதன் அளவு என்ன?

ஏ4 தாள் அளவைக் காட்டிலும் சற்று சிறியதாக இருக்கும். உயரம் 9.56 அங்குலம் . அகலம் 7.47 அங்குலம், தடிமன் 0.5 அங்குலம். மல்ட்டி டச் எல்.இ.டி. திரை 9.7 அங்குலம் குறுக்களவு கொண்டது. வை-பி மாடல் எடை 680 கிராம்; 3ஜி இணைந்தது 730 கிராம்.

10. ஐ-பேட் எப்படி சார்ஜ் செய்யப் படுகிறது?
வழக்கம்போல ஒரு பவர் அடாப்டர் மூலம் சார்ஜ் செய்திடலாம். உங்களுடைய டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பின் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தும் சார்ஜ் செய்திடலாம். சாதனம் வாங்கும்போதே பவர் அடாப்டரும் சேர்த்துத் தரப்படுகிறது.

11. இன்டர்நெட் பிரவுசிங்கை, ஐ-பேடில் எப்படி மேற்கொள் ளலாம்?
வை-பி இன்டர்நெட் இணைப்பு மூலம் மேற்கொள்ளலாம். இதற்கு வை-பி சூழ்நிலை உள்ள இடத்திற்குச் செல்ல வேண்டும். வெளிநாடுகளில் அனைத்து இடங்களிலும் இந்த வை-பி இணை ப்பு கம்பங்கள் இருக்கும். ஆனால் இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது.

12. டாட்டா போட்டான் அல்லது ரிலையன்ஸ் டேட்டா கார்டினைப் பயன்படுத்தி ஐ-பேடில் இன்டர்நெட் இணைப்பு பெற முடியுமா?
ஐ-பேடில் யு.எஸ்.பி. போர்ட் இல்லை. எனவே இவற்றைப் பயன்படுத்த இயலாது.

13. ஆப்பிள் நிறுவனம் ஐ-பேட் சாதனத்தில் பயன்படுத்தத் தரும் அப்ளிகேஷன்களை, இந்தியாவில் டவுண்லோட் செய்து இயக்க முடியுமா?

தாராளமாக. ஐ-பேட் சாதனத்திற்கென, ஆப்பிள் நிறுவனம் பல புரோகிராம்களை, கட்டணம் இன்றியும்,கட்டணத்தின் பேரிலும் தருகிறது. எடுத்துக்காட்டாக, ஆதஞீஞ்ஞுtண் என்ற ஒரு இலவச புரோகிராமினை டவுண்லோட் செய்து இணைப்பு செலவினைக் கட்டுப் படுத்தலாம்.

14. ஐ-பேட் சாதனத்திற்கான டேட்டா பிளான் தரும் நிறுவனங்கள் எவை? கட்டணம் என்ன?

இந்தியாவில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் தான், 3ஜி ஐ-பேட் சாதனத்திற்கான டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தியது. வரையறை அற்ற பயன்பாட்டிற்கு மாதம் ரூ.999. 6ஜிபி டேட்டா பெற ரூ. 599. பின்னர் பத்து கேபி டேட்டாவிற்கு 1 பைசா. ஒரு நாள் மட்டும் பயன்படுத்தி அளவற்ற டேட்டா பெற ரூ.99. வோடபோ ன், ஏர்டெல், டாட்டா டெலிசர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ் மற்றும் ஐடியா செல்லுலர் ஆகியவை, ஐ-பேட் சாதனத்திற்கான மைக்ரோ சிம் கார்டுகளைத் தயாராய் வைத்துள்ளன. கட்டண விபரங்கள் இன்னும் தெரியவில்லை.

15. ஒரே ஒரு நிறுவனத்தின் துணையுடன் தான் ஐ-பேட் சாதனத்தைப் பயன்படுத்த முடியுமா?

இல்லை. ஐ-போன் போல நிறுவனம் ஒன்றுடன் இணைக்கப்பட்ட தாக ஐ-பேட் வெளியாகவில்லை. எந்த நிறுவனத்தின் சிம் கார்ட் டேட்டா திட்டத்தினையும் பயன்படுத்தலாம்.

16.இதற்கான மைக்ரோ சிம் கார்டினை எப்படிப் பெறுவது?
இதனை வழங்கும், மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் உள்ள விபரங்களைச் சரி பார்த்த பின்னர் மைக்ரோ சிம் கார்டு தருவார்கள்.

17. வெளியூர்களுக்குப் பயணிக்கையில் ஐ-பேடில் இணைக்கப் படும் சிம் கார்டு இயங்குமா? தொடர்பு சரியாகக் கிடைக்குமா?
பி.எஸ்.என்.எல். நிறுவனம் “panIndia 3G Internet” என்ற ஒரு திட்டத்தினை வழங்குகிறது. மற்ற தனியார் நிறுவனங்கள் இதற்கென மற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ள்ளனர். இந்தியாவில் இன்னும் 3ஜி முழுமையாக வரவில்லை. வரும்போது இதனைப் பெறலாம்.

18. ஐ-பேட் போன்று மற்ற நிறுவனங்கள் சாதனங்களை வெளியிட்டுள்ளனவா?

ஆம். சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி டேப், ஆலிவ் டெலிகாம் நிறுவன ஆலிவ் பேட், டெல் ஸ்ட்ரீக் ஆகியவற்றை இங்கு குறிப் பிடலாம். இன்னும் சில நிறுவனங்கள் தங்களின் சாதனங்களைக் கொண்டு வர இருக்கின்றன. இவை அறிமுகப்படுத்தப்பட்ட பின் னர் தொடர்ந்து விலை குறைக்கப்பட்டும் வருகின்றன. எடுத்துக் காட்டாக, முதலில் ரூ.38,000 விலையிட்ட சாம்சங் சாதனம் தற்போது ரூ.30,000க்குக் கிடைக்கிறது. மொபைல் போன் போல வும் பயன்படுத்தும் ஸ்ட்ரீக் ரூ.33,000க்குக் கிடைக்கிறது.

( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: