Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குஷ்பு, கருணாநிதிக்காக பெற்ற பட்டம்!

முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்பட்ட திரைத்துறையின் இதயம் பட்டத்தை நடிகை குஷ்பு பெற்றுக் கொண்டார். சமீபத்தில் திரைக்கு வந்த இளைஞன் படத்திற்கு முதல்வர் கருணா நிதி கதை, வசனம் எழுதி யிருந்தார். மார்ட்டின் தயாரி ப்பில் தயாரிக்க ப்பட்ட இந்த படத்தின் நாயகனாக பாடலா சிரியர் பா.விஜய்யும், நாயகி யாக ரம்யா நம்பீசன், மீராஜாஸ்மீன் ஆகியோரும் நடித்தி ருந்த னர். நடிகைகள் குஷ்பு, நமீதா உள்ளிட்டோர் முக்கிய வேடத் தில் நடித்திருந்தனர். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்கி யிருந்தார்.

இந்த படத்திற்கு சிறந்த வசனம் எழுதியமைக்காக முதல்வர் கருணாநிதிக்கு சிறந்த வசனகர்த்தா விருது வழங்க நாக்பூர் திரைப்பட விழா குழுவினர் முடிவு செய்தனர். இதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பிய அவர்கள், விழாவின்போது திரைத்துறைக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வரும் கருணாநிதிக்கு, திரைத்துறையின் இதயம் என்ற பட்டத்தை வழங்கப்போவதாகவும் தெரிவித்திருந்தனர்.

முதல்வர் கருணாநிதி தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதால், தன் சார்பில் நடிகை குஷ்புவையும், டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவையும் விழாவுக்கு அனுப்பி வைத்தார். திரைத்துறையின் இதயம் பட்டத்தையும், சிறந்த வசனகர்த்தா விருதையும கருணாநிதிக்காக நடிகை குஷ்பு பெற்றுக் கொண்டார். அந்த விருது மற்றும் பட்டத்தை கருணாநிதியிடம் குஷ்பு வழங்கினார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: