உலக காதலர் தினம் தாய்லாந்தில் உள்ள தெற்கு கடற்கரை நகரமான பட்டாயாவில் கொண்டாடப்பட்டது. இதில் ஒருவருக் கொருவர் நீண்ட
நேரம் முத்தமிடும் போட்டி நடத்தப்பட்டது.

இதில், தாய்லாந்தை சேர்ந்த 14 ஜோடிகள் கலந்து கொண்டனர். இதில் பெரும்பாலான ஜோடிகள் முத்தமிட்டு ஓய்ந்துவிட்டனர். இனி தங்களால் முடியாது என்ற நிலையில் போட் டியில் இருந்து அவர்கள் வெளியேறினர்.
இந்த நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை சேர்ந்த எக்காசாய்-லக்சனா திரானரத் ஜோடி 46 மணி 24 நிமிட நேரம் தொடர்ந்து முத்தமிட்டு வெற்றி பெற்றனர். இவர்கள் இருவரும் கணவன்- மனைவி ஆவர்.
கடந்த 2009-ம் ஆண்டு ஜெர்மனி தம்பதி 32 மணி நேரம் தொடர்ந்து முத்தமிட்டு சாதனை படைத்தனர். இதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
தற்போது இவர்கள் 46 மணி 24 நிமிடங்கள் தொடர்ந்து முத்த மிட்டு ஜெர்மனி தம்பதியின் முந்தைய உலகசாதனையை முறியடித்தனர். வெற்றி பெற்றுள்ள தாய்லாந்து தம்பதிக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள வைர மோதிரமும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணமும் பரிசாக வழங்கப்பட்டது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )